மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு நிதியுதவியினை வழங்கிய கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 01:42.03 PM GMT ]
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மேல் வழக்குகள் இருந்தாலும் , இல்லையென்றாலும் இவர்களை தமிழக காவல்துறை விடுவிப்பதில்லை. தங்களை விடுவிக்கக் கோரி ஈழத் தமிழர்கள் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தி உள்ளனர்.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது கருத்தினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
“யுத்தத்தின் வடுக்களைச் சுமக்கும் எங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் கல்வி ரீதியான சாதனைகளை நிகழ்த்தவும் எங்கள் இனத்தின் அடையாளத்தை நிலை நிறுத்தவும் இன்று மாற்று வலுவுள்ளவர்களாக இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.
எங்கள் நிலமும், மொழியும், பண்பாடும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழர்களாகிய நாங்கள் மாற்று வலுவுள்ளோர் என்ற பதத்துள் எம் குழந்தைகளை அடக்காது எதிர்காலத்தில் எம் மண்ணின் சாதனையாளர்களாகக் கருதி அவர்களைக் கல்வி ரீதியாக வளர்த்துவிட வேண்டிய கடமையும் கடப்பாடும் எம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற வகையில் கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் உறவான மோகன் அவர்களின் உதவியினை ஒரு பெரிய விடயமாகக் கருதுகின்றோம்.
நாங்கள் எம் நிலத்தில் நிலையாக நிற்பதற்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை எட்டிப்பிடிப்பதற்கும், வரலாற்று ரீதியான எம் மண்ணைக் காப்பதற்கும் அறிவு ரீதியாக நாம் போராடும் அதே நேரம் எம் பொருளாதாரத்தினையும் பலப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் த.சேதுபதி, சு.தயாபரன், செ.புஸ்பராசா, சி.சுப்பையா, சி.தவபாலன், இ.பொன்னம்பலநாதன் ஆகியோரும், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் கு.சர்வானந்தா, வரோட் நிறுவனப் பணியாளர்கள், மாற்றுவலுவுள்ள பள்ளிச் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் உதவியினை ஆற்றிய கனடா மொன்றியலில் வசிக்கும் மோகன் அவர்களுக்கு மாற்றுவலுவுள்ள சிறார்கள் தமது உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பட்டினிப் போராட்டம்!
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 01:36.25 PM GMT ]
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மேல் வழக்குகள் இருந்தாலும் , இல்லையென்றாலும் இவர்களை தமிழக காவல்துறை விடுவிப்பதில்லை. தங்களை விடுவிக்கக் கோரி ஈழத் தமிழர்கள் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தி உள்ளனர்.
இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகதமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் பல முறை முற்றுகை போராட்டம் செய்துள்ளன. அதன் பின் இரண்டு மூன்று பேர்களை காவல்துறை விடுதலை செய்யும். பின்பு ஐந்து அல்லது ஆறு பேர்களை சிறப்பு முகாமில் கொண்டு வந்து அடைத்து விடும்.
இந்நிலையில் சென்ற வாரம் வழக்கத்திற்கு மாறாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து ஐந்து நபர்களை காவல்துறை வெளியேற்றி அவர்களை திருச்சி சிறைச் சாலையில் அடைத்து வைத்தது. வெளிநாட்டு வாழ் மக்களின் சட்டப்படி ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. அவர்களை சிறப்பு முகாம்களில் தான் அடைத்து வைக்க வேண்டும்.
ஆனால் தமிழக அரசு , இந்த ஈழத் தமிழர்களை சிறப்பு முகாம் என்று சொல்லி சட்டவிரோதமாக திருச்சியில் உள்ள துணை சிறையில் அடைத்து வைத்துள்ளது. மேலும் இவர்களை சிறைவாசிகளை போலவே நடத்த உத்திரவிட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் உறவினர்கள் வந்து பார்வையிடலாம். அலைப்பேசி கணினி கருவிகளை பயன்படுத்தலாம். சிறையில் இதற்கெல்லாம் அனுமதி இல்லை.
மேலும் அவர்களின் உணவை கூட கிண்டி கிளறி சோதனையிட்ட பின்பே ஈழத் தமிழர்களுக்கு தரப்படுகிறது. கழிவறைக்கு செல்லும் போது கூட காவல்துறையினர் கூடவே வருகின்றனர். இப்படியாக முகாம்வாசிகளை சிறைவாசிகளாக பாவிக்கிறது காவல்துறை,
இந்த கொடுமைகளை கண்டித்தும், தங்களை திறந்தவெளி முகாமிற்கும் மாற்றும் படியும் கோரிக்கை வைத்து சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த ஈழத் தமிழர்கள் . அவர்கள் பெயர்கள் வருமாறு சௌந்தuராஜன், ஈழ நேரு, செல்வராஜா, தவதீபன் மற்றும் இலங்கை நாதன். இவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை தமிழக அரசுக்கு இருக்குமே எனில் முதலில் இந்த சிறையில் இருந்து ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten