தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

மேனனின் வருகை தமிழர் தீர்வுக்கா? இல்லையேல் மேலும் தமிழரைத் தீர்த்துக்கட்டவா? வித்திடும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட தயா மாஸ்டர் தீர்மானம்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 02:10.56 PM GMT ]
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சுதந்திரக் கட்சியின் சார்பில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேனனின் வருகை தமிழர் தீர்வுக்கா? இல்லையேல் மேலும் தமிழரைத் தீர்த்துக்கட்டவா? வித்திடும்!
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 02:10.39 PM GMT ]
இந்திய வெளியுறவு செயலாளர  சிவ்சங்கர் மேனனின்  வருகையானது தமிழர் தீர்வுக்கு வித்திடுவதற்கா? இல்லையேல் மேலும் தீர்த்துக்கட்டும் பழிவாங்கல் படலமா? என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா கேள்வி எழுப்பினார்.
ஏனெனில் முள்ளிவாய்க்கால் தமிழர் அழிவுக்கு முன் இந்தியா அரசு தமிழரை கைவிடேன் எனக் கூறிக்கொண்டு இருக்கையில் ஆளும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, மகள் பிரியங்காவை கணவரான ரஜிவ் காந்தி கொலையாளி நளினியை சந்தித்து கொலையின் சூத்திரத்தை தெரிந்து கொண்டபின். தமிழர் அழிவுக்கு வித்திட்ட முள்ளிவாய்க்கால் கொலையில் இந்தியாவின் பங்களிப்பு தெரிந்த விடயம் இப்பழிவாங்கல் தமிழர் மனக் கண்ணில் இருந்து இன்னும் மறையவில்லை. தற்போது பழிவாங்கல் மனநிலை மாற்றமடைந்து தீர்வுக்கான மேனனின் விஜயம் அமையுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அது சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில்,
ஆளும் இந்திய காங்கிரஸ் அரசுக்கு பழிவாங்கல் புதிதல்ல, ஏனெனில் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலன் கொன்ற போது ஆயிரக்கணக்கான சீக்கிய மக்களை கொன்று குவித்தது தெரிந்த விடயம்.
அதன் பின் நடந்த பத்திரிகை மாநாட்டில் அப்போதைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியைப் பார்த்து ஓர் பத்திரிகையாளர் ஏன் இக்கொலையை உடன் தடுக்கவில்லை என்று கேட்டதற்கு பதிலளித்த ராஜீவ் “ஓர் அரச மரம் விழுந்தால் அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்” என சாவகாசமாக பதில் கூறியிருந்தார்.
அதுபோல் தான் தமிழ் மக்களின் விடிவிற்காக போராடிய புலிகளை முன் ஆதரித்து பயிற்சி வழங்கிய இந்தியா, ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் புலிகளுக்கு எதிரான பழிவாங்கல் படலத்தை ஆரம்பித்தது.
அதன் உச்சகட்டமாக இறுதிதிக்கட்ட உச்ச போரான முள்ளிவாய்க்கால் போரின் போதும் கூட “தமிழ் மக்களை கைவிடோம்” எனக் கூறிக் கொண்டிருந்தும் கூட கடைசியில் நடந்தது உலகமறியும்.
இலங்கையில் அடிவாங்கி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் இலங்கை அரச அதிபர் ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களுடன் செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பெற்ற குழந்தையான ஒன்றுமில்லாத பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் படும் பாட்டை மௌனமாகப் பார்க்கும் இந்தியா தமிழர் தீர்வுக்கு இனியும் ஆக்க பூர்வமான தமிழர் சார்பான நிலைப்பாடு மேனனின் வருகையுடன் ஏற்படுமா?
இலங்கைத் தமிழரின் இன்னல் போக்க இந்தியா கைகொடுக்குமா?
இல்லையேல் “இலங்கைத் தமிழரைக் கைவிடோம்” எனக் கூறுவது கடலில் தத்தளிக்கும் ஒருவருக்குக் கை கொடுத்து கரை சேர்க்க உதவுவதற்கு ஒப்பானதா?
இல்லையேல் மீளத் தப்ப முடியாமல் நடுக்கடல் வரும் வரைக்கும் பார்த்து இனியும் உயிர்பிழைக்க முடியாத இடத்தில் கையை விடுவதற்கு ஒப்பான செயலையா இந்தியா தமிழர் மீது செய்யப் போகிறது என்பதை உலகில் வாழும் சகல தமிழர்களும் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
இவ்வேளையில் இந்தியா தீர்க்கமான ஒருமுடிவை எடுக்கும் காலம் வந்துவிட்டது என பாஸ்க்கரா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten