[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:06.12 AM GMT ]
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றாது என்று ஆரூடர்கள் கூறியுள்ளதாக அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் ரூடர்களை ஒன்றுகூட்டி அவர்களின் ஆரூடங்கள் பெறப்பட்டன.
இதன்போது சில ரூடர்கள் ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடத்துக்குள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தனர்.
எனினும் இலங்கையின் முன்னணி ரூடர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றோ ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆட்சி அமையும் என்றோ கூறவில்லை என்று சண்டே ஒப்சேவர் மேலும்குறிப்பிட்டுள்ளது.
பௌத்த அமைப்புக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:09.18 AM GMT ]
பௌத்த அமைப்புக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜாதிக ஹெல உறுமய, பொதுபலசேனா, ராவனா பலய, சிங்கள ராவய, தேசிய சங்க சம்மேளனம் உள்ளிட்ட சிங்கள பௌத்த அமைப்புக்கள் குறித்து இரகசிய கண்காணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த அமைப்புக்களுக்கு எவ்வாறு நிதி கிடைக்கப்பெறுகின்றது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகின்றது.
அமைப்புக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களினது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கோவைகள் பலனாய்வுப் பிரிவினரால் பேணப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten