[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 03:02.24 AM GMT ]
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ஹோமாகம, மாவட்ட நீதிவான் சுனில் அபேசிங்கவின் பாதுகாப்பு குறித்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விசாரணைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளார்.
குற்றச்சாட்டின் பேரில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டபோது அவருக்கு மெய்ப்பாதுகாவல் நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய இந்த வாரத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சந்திக்கவுள்ளது.
இவர்கள் நீதிவானை படம்பிடிக்கவோ அல்லது பேட்டி காணவோ பத்திரிகையாளர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
இந்தநிலையில் நீதிவான் ஒருவர், பொதுமக்களை தமது பாதுகாவலர்களாக வைத்திருக்க முடியாது என்ற அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
13ஐ ரத்துச் செய்ய ஜாதிக ஹெல உறுமய கட்சிகளை சந்திக்கிறது!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 12:13.28 AM GMT ]
இதன் அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியை ஜாதிக ஹெல உறுமய இந்த வாரத்தில் சந்தித்து 13வது அரசியலமைப்பை ரத்துசெய்வது தொடர்பில் கலந்துரையாடும் என்று அதன் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் தாம் பேச்சு நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 வது சரத்து நாட்டின் இறைமைக்கு பாதகம் என்று கூறியே ஜாதிக ஹெல உறுமய இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten