[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 07:12.37 AM GMT ]
நோயின் கொடுமை தாங்க முடியாமல் இளம் பெண் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த சர்வேஸ்வரன் பிரிந்தா (வயது 26) என்ற இளம் பெண்ணே நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவரது சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர். தனுசன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட மீன்பிடியை ஒழிக்க நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 07:29.50 AM GMT ]
யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் நடைபெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது.
வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
விரைவில் யாழில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைக் கைவிட்டு மற்றுத் தொழிலைச் செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
யாழில் முழமையாக தடை செய்யப்பட்ட மீன்டிபிடி முறையை ஒழிக்குமாறு கடற்றொழில் அமைச்சிடமிருந்து தொடர் கடிதங்கள் வந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten