வெளிநாட்டு நாணய கடன்கள் குறைக்கும் முயற்சியில் மத்திய வங்கி - பஹ்ரேனில் இலங்கைக்கான பிறிதொரு தூதரகம் திறப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:19.04 AM GMT ]
கடந்த ஆண்டு கடன்கள் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலக்கை அடைய முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் 2012 ஆம் ஆண்டுக்கான பொதுக்கடன் முகாமைத்துவம் 43 சதவீதமாக இருந்தது, அந்த தொகையை 2016 ஆம் ஆண்டு 30 சதவீதமாக குறைப்பதே நோக்கம் என்று மத்திய வங்கி ஆளுனர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு கடனை 20 சதவீதமாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த தொகையை 25 சதவீதம் அல்லது 813,3 பில்லியன் ரூபாய்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஹ்ரேன் ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பிறிதொரு தூதரகம் திறப்பு
பஹ்ரேன் ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான பிறிதொரு தூதரகம் மனாமா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பாரிய தொகையிலான பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பஹ்ரேனில் பணியாற்றுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கிய உறவினை பேணும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே இந்த தூதரகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பஹ்ரேனின் வெளிவிவகார அமைச்சர் அந்த தூதரகத்தை நேற்று தூதரகத்தை திறந்து வைத்தார்.
வெலிக்கடை சிறையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம் - சிறைச்சாலையில் மோசடிகளை முறியடிக்க நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:11.23 AM GMT ]
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இரண்டாயிரத்து 500 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சிறைக் கைதிகளை வெளியேற்றும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர கூறியுள்ளார்.
முதற்கட்டமாக இடவசதியுள்ள சிறைச்சாலைகளுக்கு படிப்படியாக கைதிகள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
களுத்துறை, காலி, வட்டரெக்க ஆகிய சிறைச்சாலைகளுக்கு தற்போது வெலிக்கடையில் இருந்து கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அனைத்துப் பெண் கைதிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
சிறைச்சாலையில் மோசடிகளை முறியடிக்க நடவடிக்கை
இலங்கையில் சிறைச்சாலைகளில் இடம்பெறும் அனைத்து மோசடிகளையும் முறியடிப்பதற்காக சிறைச்சாலை புலனாய்வுத்துறையை வலுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் கடத்தல்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் வெலிக்கடை, போகம்பரை மற்றும் கொழும்பு மகசின் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் துகள்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி அட்டைகள் என்பன
மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் போது சிறைச்சாலைகளில் பலவிதமான மோசடிகள் இடம்பெறவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக இவ்வாறான மோசடி நடவடிக்கைகளின் போது சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதுதவிர, சிறைச்சாலைகளில் இருந்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் ஊடாக போதைப்பொருட்களும், சட்டவிரோத பொருட்களும் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
எனினும், இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் தருணங்களில் சிறைச்சாலை புலனாய்வுத்துறையில் காணப்படும் பலவீனம் பெரும் இடையூறாக இருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, துரிதமாக சிறைச்சாலைகள் புலனாய்வுத்துறை வலுப்படுத்துவது குறித்து அந்த அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten