தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 juni 2013

வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா


வான்படைச் சிப்பாய் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:55.46 AM GMT ]
வான்படைச் சிப்பாய் ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனுராதபுர வான் படை முகாமில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகாமில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார்.
21ம் படையணியைச் சேர்ந்த எஸ்.டி.எஸ் சிகுராதிபதி என்ற படைச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
விமானப்படை விடுதி வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி
அநுராதபுரம் விமானப்படை முகாமில் உள்ள விமானப்படை விடுதி அறை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) அதிகாலை 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
31 வயதான ரதாவன பிரதேசத்தில் வசிக்கும் விமானப்படை வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:48.02 AM GMT ]
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் நாயகம் பிரதீப் மகாநாமஹேவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்பொருட்டு, சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கைக்கு சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இலங்கையின் மனிதவுரிமைகள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களிடையே சென்றடையும் முறையற்ற அபிப்பிராயங்களை சரிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் நாயகம் பிரதிப மகாநாமஹேவா தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலி ஆதவு புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஆணையாளர், அவர்களை சென்று வலியுறுத்தக் கூடிய சில புலம்பெயர்ந்த அமைப்பினர் தமதுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக குறிப்பிட்டார்.
மத்தியஸ்தம் வகிக்கும் புலம்பெயர்ந்தவர்களையும் எமது பக்கம் திசைதிருப்பிக் கொள்ள முடியும்.
பாலஸ்தீன, ஈராக், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமான முறையில் ஆதரவினை வழங்குவதாக பிரதிப மகாநாமஹேவா சுட்டிக்காட்டினார்.
அவர்களுடன் நெருக்கமான உறவுகளை பேணும் போது மேலைநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை தொடர்புகொண்டு இலங்கையின் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten