தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

விமர்சித்த ஊடக அமைச்சர் கெஹலியவுக்கு பேராயர் இராயப்பு ஜோசப் பதிலடி!

பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!– கோத்தபாய ராஜபக்ச
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 02:58.25 PM GMT ]
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது பற்றி இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது இந்தியாவிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நான்காம் கட்ட ஈழப் போரின் போதே இது அறிவிக்கப்பட்டது. இன்றும் அதே நிலைப்பாடு காணப்படுகின்றது, அதில் மாற்றங்கள் கிடையாது.
இது தொடர்பில் எந்தத் தரப்பினரும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
இந்தியாவும் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தக் கூடாது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகத் தெரிவித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு ஏற்கனவே இந்தியாவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

விமர்சித்த ஊடக அமைச்சர் கெஹலியவுக்கு பேராயர் இராயப்பு ஜோசப் பதிலடி!
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 02:53.52 PM GMT ]
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் விமர்சனக் கருத்துக்களுக்கு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் நடவடிக்கைகளை அமைச்சர் கெஹலிய கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மன்னார் பேராயரை அமைச்சர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒப்பீடு செய்திருந்தார்.
எனினும், இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என பேராயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
நபர்களின் கருத்து நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களில் தகவல் வெளியிடும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தாம் ஒருபோதும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தம்மிடம் விபரங்களை கேட்டறிந்து அதன் பின்னரே கருத்து வெளியிட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்களை எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பதனை ஊடக அமைச்சர் அம்பலப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரபாகரன் ஓர் போராளி எனவும், தாம் ஓர் ஆன்மீகவாதி என்வும் அதனை ஊடக அமைச்சர் நினைவில் நிறுத்தி ஒப்பீடுகளை செய்ய வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால் பேராயர் சம்மேளனத்தின் ஊடாக தொடர்பு கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டுமென பேராயர் ஜோசப் இராயப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten