[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 04:07.13 PM GMT ]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், இன்று சனிக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
கழக இளைஞர் அணிச் செயலாளர், பொறியாளர் வே.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் இளைஞர் அணியை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் அடுத்த ஆறுமாத காலத்திற்குள் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது, கட்சியில் புதிதாக சேர்க்கப்படும் இளைஞர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டங்களை நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் மாவட்ட வாரியாக நடத்துவது,
செப்டம்பர் 15ல் விருதுநகரில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் இளைஞர் அணியினர் 10,000 பேர் சீருடையில் பங்கேற்பது,
தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி தமிழகத்தில் உறுதி கூறிய அதே நாளில், பயிற்சிக்காக இலங்கை இராணுவத்தினரை, தமிழகத்தில் அனுமதித்திருப்பது இராணுவ அமைச்சரின் கண்ணியத்தையும், நேர்மையையும் கேள்விக்குரியாக்கி உள்ளது.
இது இந்தியாவிற்கு அவமானச் செயலாகும்.தமிழக மக்களுக்கு துரோகம் செய்த இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி அப்பதவியை வகிக்க தகுதியற்றவராகிறார். அவர் உடனே பதவி விலக வேண்டும்,
லட்சக் கணக்கான தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த, இலங்கை இராணுவக் கொலைகாரர்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும், அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும், இனி எப்போதும் இந்தியாவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக்கூடாது, உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 04:19.06 PM GMT ]
டுபாயிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார் 226 விமானம் மூலமே குறித்த நபர் இலங்கைக்கு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்திறங்கிய போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து 785 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 34 டெப்லட் கணனிகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபரொருவரே இவற்றைக் கடத்தி வந்துள்ளதாகவும்,கடத்தல்கள் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை சுங்கப் பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten