தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

வடமாகாண சபை தேர்தல்: ஆளும் கட்சி வேட்பாளரை மஹிந்த ஹத்துசிங்க தெரிவு செய்தார்

பிரிட்டன் பொலிஸார் புலிகளுக்கு ஆதரவு! அங்குள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! ஹெல உறுமய
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 12:53.14 AM GMT ]
இங்கிலாந்தில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்த போதிலும், பிரித்தானிய அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு முறைமுகமாக வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாகவே, பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் முடிவில், புலிகளின் ஆதவாளர்கள் சிங்களவர்களை தாக்கி, அச்சமின்றி வெளிப்படையாக செயற்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் இறுதியில், சுமார் 200 விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், மிகவும் குழப்பமாக, வன்முறையாக செயற்பட்டு, சிங்கள கிரிக்கெட் ரசிகர்கள் மீது இரும்பு கம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர்.
இதற்கு முன்னர், இலங்கை அவுஸ்திரேலிய இடையிலான போட்டியின் போது புலிகளின் ஆதரவாளர்கள் சிங்களவர்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டனர். மேலும் சிங்கக் கொடியை மிதித்து கொண்டு புலிக் கொடியை ஏந்தியும் இலங்கைக்கு எதிராக பதாகைளை எடுத்து கொண்டும் மைதானத்தில் போட்டிக்கு தடையேற்படுத்தினர்.
அரையிறுதிப் போட்டியில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில், இந்த செயற்பாட்டில் ஈடுபட தயாராகி வருவதாக இலங்கை தூதரக அலுவலகம் ஊடாக பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து பிரித்தானிய அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு எமது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இங்கிலாந்தில் இருக்கும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசு, இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை தேர்தல்: ஆளும் கட்சி வேட்பாளரை மஹிந்த ஹத்துசிங்க தெரிவு செய்தார்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 02:27.45 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் நேர்முகம் செய்து தெரிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஏ எச் எம் பௌசி ஆகியோரும் இருந்துள்ளனர்.
இதன்பின்னர் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேரும் மேலதிக ஆலோசனைகளுக்காக கொழும்புக்கு இராணுவத்தினராலேயே அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் தயா மாஸ்டர், ரெமீடியஸ் உட்பட்ட 21 பேரும் மன்னாரில் 3 பேரும் வவுனியாவில் 2 பேரும் கிளிநொச்சியில் 6 பேரும் ஆளும் கட்சியில் இணைந்துப் போட்டியிட விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten