தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம்


மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி தேவையற்ற மத முரண்பாட்டை கிளப்புகின்றார்!- மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 09:14.21 AM GMT ]
மட்டக்களப்பு, மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட். நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை அமைப்பேன் என்றும் கூறி விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தேவையற்ற மத அடிப்படைவாத முரண்பாட்டை ஏற்படுத்துகிறார். 
அத்துடன், பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு வரும் வழியெங்கும் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என்றும் அவா் சவால் விடுத்துள்ளார்.
இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள இராமாயண புகழ் பெற்ற மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அடையாளப்படுத்தும் முகமாக மாபெரும் பிள்ளையார் சிலைகளை இந்நாட்டு இந்துக்கள் மட்டக்களப்பு நகரை அடையும் அனைத்து சாலை நுழைவாயில்களிலும் அமைக்க முடியும் என்பதை மங்களராமய விகாராதிபதி நினைவில் கொள்ள வேண்டும்.
இது பெளத்த நாடு அல்ல. இது பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் வாழும் நாடு என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
மட்டக்களப்பு மங்களராமய விகாரை ஒரு மத தலம். அது வியாபார நிலையமாக இருக்க முடியாது. மத வழிப்பாட்டு தலங்களுக்கு வருகை தருபவர்கள் தேடி வந்து வழிபட வேண்டும்.
இருக்கும் இடத்தையும்,வரும் வழியையும் அடையாளப்படுத்த விளம்பரப்பலகை வைப்பது வியாபார நிலையங்களுக்கு ஆகும். இந்த உண்மை மட்டக்களப்பு விகாரதிபதிக்கு மறந்துபோய் விட்டது.
இந்நிலையில் இவர் கண்டியில் இருக்கின்ற இந்து கோவில்களை பற்றி விளக்கம் இல்லாமல் பேசுகின்றார். இந்துக்கள் இல்லாத இடங்களில் இந்து கோவில்கள் ஒருபோதும் கட்டப்படுவது இல்லை.
இன்று எங்காவது இந்து மக்கள் இல்லாத இடங்களில், இந்து கோவில்கள் இருந்தால் அங்கு ஒரு காலத்தில் இந்துக்கள் இருந்தார்கள் என்று அர்த்தமாகும்.
கதிர்காமம் மிக பிரசித்தமான கதிர்காம கந்தன் என்ற முருகன் ஆலயம் ஆகும். இன்று அங்கு இந்துக்களை விரட்டி அடித்துவிட்டு இந்து அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அந்த தலம் ஓரு பெளத்த தலமாக மாற்றப்பட்டு விட்டது.
அங்கே இப்போது விஷயம் தெரியாமல் போய் வரும் இந்து யாத்திரீகர்கள், கதிர்காமத்தில் இன்று கதிர்காம கந்தனின் அருளாட்சியும் இல்லை, இந்துக்களும் இல்லை என சொல்லுகின்றார்கள்.
மத பக்தர்கள் தாம் வாழும் இடத்தில் கோவில் அல்லது விகாரை கட்டுவது என்பது ஒன்று. கட்டப்பட்டு இருக்கும் கோவில் அல்லது விகாரையை அடையாளப்படுத்துவதற்காக வழியெங்கும் சிலைகளை நிறுவுவது என்பது வேறு ஒன்று.
அவற்றை விளம்பரப்படுத்துவதற்காக விளம்பரப்பலகை வைப்பது என்பது இன்னொன்று.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ இந்த மூன்றையும் ஒன்றாக கருதி கருத்து தெரிவிப்பது, தேவையற்ற மத அடிப்படை வாத முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 08:57.58 AM GMT ]
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாதாந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்றது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமான இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இந்த நேரத்தில் நடைபெற்ற இக்கூட்டம் மிக எதிர்பார்ப்புடையதாக அமைந்திருந்தது.
மாகாணத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருதல், கூட்டமைப்பில் ஒரு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தல் தொடர்பான விடயங்கள் இக்கட்சியின் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாக ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏனைய மாதாந்தக் கூட்டங்களைப் போலல்லாது இக்கூட்டம் பல தரப்பினராலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
வடக்கு மாகாண சபைக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பிலான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டிய முக்கிய கூட்டமாக இக்கூட்டம் கருதப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten