தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்


புத்தளத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் ஏற்பட்ட கோளாறால் பீதியடைந்த மக்கள்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 07:41.29 AM GMT ]
புத்தளம் - உடப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதால் பிரதேச மக்கள் பீதியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10.21ற்கு இரண்டு தடவைகள் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பெரும் அச்சமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள், இதுகுறித்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து இயந்திர கோளாறு காரணமாகவே சமிக்ஞை இயந்திரம் தானியங்கியுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதானி ரணவீர தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் ஈழத்தமிழர்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 08:21.29 AM GMT ]
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
ஆங்கில இணையத்தளமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 30 ம் திகதி சிவலிங்கம் சிவநாதனுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன், அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார்.
பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவருக்கு சகல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten