[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 03:08.19 AM GMT ]
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக இலங்கை யுவதிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவே உபுல் என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிங்கப்பூரில் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடும் முக்கியஸ்தர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை ஐந்து பெண்களை அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மற்றுமொரு நபர் பற்றிய தகவல்களையும் அந்நாட்டு பொலிஸார் கண்டபிடித்துள்ளனர்.
அளுத்கம சம்பத் என்பவரே இவ்வர்று இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் நாடு திரும்பியுள்ளதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 டொலர்கள் மட்டுமே வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தண்ணீர் கோப்பையில் முதலைகளை காணும் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது!- கரு ஜயசூரிய
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 03:12.03 AM GMT ]
தண்ணீர் கோப்பையில் முதலைகளை காணும் ஆட்சியே தற்போது நாட்டில் காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது ஜனநாயக நாடொன்றின் முக்கிய பண்பியல்பாகும்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யவும், சுதந்திரமான முறையில் அரசியல் செய்யவும் மக்களுக்கு அனுமதியிருக்க வேண்டும். எனினும், சர்வாதிகார நாடொன்றில் இந்த பண்பியல்புகளை காண முடியாது.
இவ்வாறான நாடுகளில் அரசாங்கத்தை விமர்சனம் செய்வது ராஜத் துரோகமாகவே கருதப்படுகின்றது. நாட்டில் தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது.
அன்று பயங்கவரவாதிகளை இல்லாதொழிக்க பயன்படுத்தப்பட்ட சட்டமானது இன்று, எதிர்க்கட்சியினரையும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரையும் அடக்கி ஒடுக்கப் பயன்படுகின்றது.
தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஏகாதிபத்திய ஆட்சிக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிருலப்பனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten