இந்நிலையில், வட மாகாணசபைத் தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிற்போடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்சானியா செல்வதற்கு முன்னர் இது தொடர்பான பிரகடனத்தில் கையெழுத்திடுவார் என்று கருதப்படுகிறது.
அத்துடன் வட மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தும்படியும், அவர், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு உத்தரவிடுவார்.
அதையடுத்து, தேர்தல் ஆணையாளர், வரும் ஜுலை 19 தொடக்கம் 25ம் நாள் வரையிலான காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை அடுத்தமாதம் 5ம் திகதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக் கோரும் பணிகள் தாமதமாகியுள்ளதால், முன்னர் திட்டமிடப்பட்டதற்கு இரண்டு வாரங்கள் தாமதமாக, வரும் செப்ரெம்பர் 21ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten