தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 juni 2013

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட வேண்டும்!- ஹக்கீம்!

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை: கே.பி
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:19.08 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தொலைபேசி செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபையின் முதல்வராக யார் தெரிவாவவார்கள் என்பது பற்றி திடமாக குறிப்பிட முடியாது.
வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது.
போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட வேண்டும்!- ஹக்கீம்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:20.15 AM GMT ]
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 நாட்டின் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளடக்காமை பாரிய தவறாகும்.
 அவ்வாறான தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
கட்சியின் பிரதிநிதிகளை உள்ளடக்காமையின் மூலம் அரசாங்கம் பாரிய அநீதி இழைத்துள்ளது.
சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள அரசாங்கம் பிரதான முஸ்லிம் கட்சியின் பிரதிநிதிகளை உள்ளடக்கத் தவறியுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் சர்வதேசத்தின் நம்பிக்கை மேலும் வழுவிழக்கும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் தேர்தலில் போட்டியிட ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 18ம் திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தது.
அவ்வாறு ஆதரவளித்த கட்சிக்கு அரசாங்கம் காட்டும் நன்றி விசுவாசம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இனைக் குறிப்பிட்டுள்ளார்.
 


Geen opmerkingen:

Een reactie posten