தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

இலங்கை - கனடா இராஜதந்திர முறுகல்: தூதுவர் நியமனங்களும் இழுத்தடிப்பு!

ஈழப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மாணவர் பேரவை வாகனப் பேரணி! இலங்கைக்கு எதிராக பிரச்சாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 10:09.30 AM GMT ]
இனப்படுகொலை செய்த சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் அனைத்து கல்லூரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியுள்ளார்கள்.
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்..
காந்தி சிலை முன் மருத்துவர் எழிலன் நாகநாதன் கொடியசைத்த பின் வாகனப் பேரணியை தொடக்கிய கல்லூரி மாணவர்கள் இவர்களுடன் அந்தந்த ஊர்களில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து கொள்கிறார்கள்.
மாணவர்கள் வீ.பிரபாகரன், நந்தகுமார், அருண் மொழி வர்மன், கார்த்தி, கார்த்திகேயன், முரளி. முரளி, குமார், விக்கி விக்னேஸ்வரன், ஜெயச்சந்திரன், விஜயபாலன்,  அனுஷ், மது ஆகிய மாணவர்களின் வாகன பேரணி கீழ்க்கண்ட ஊர்களின் வழியாக மக்களிடம் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.
23/06/13- சேலம்-ஈரோடு-கோவை,
24/06/13- பொள்ளாச்சி-உடுமலைபேட்டை -பழனி-புதுக்கோட்டை,
25/06/13- காரைக்குடி-ராமநாதபுரம்-ராமேஸ்வரம்,
26/06/13- தூத்துக்குடி-திருநெல்வேலி-கன்னியாகுமரி
27/06/13- கன்னியாகுமரி-கோவில்பட்டி-விருதுநகர்-திருமங்கலம்-மதுரை
28/06/13- திருச்சி-தஞ்சாவூர்,
29/06/13- கும்பகோணம்-மயிலாடுதுறை-சிதம்பரம்-புதுச்சேரி
30/06/13- புதுச்சேரி-சென்னை.
இலங்கை - கனடா இராஜதந்திர முறுகல்: தூதுவர் நியமனங்களும் இழுத்தடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 10:39.19 AM GMT ]
இந்த இராஜதந்திர மோதல் தற்போது இலங்கைக்கும் கனடாவுக்கும் நடக்கும் இராஜதந்திர முறுகல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இலங்கையும் கனடாவும் பரஸ்பரம் தங்கள் நாடுகளுக்கான புதிய தூதுவர்களின் நியமனங்களை ஏற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தும் போக்கைக் கையாளத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிப்பதற்கும், அதனை வேறொரு நாட்டுக்கு மாற்றுவதற்கும் கனடா வலியுறுத்தி வருவதன் காரணமாக அண்மைக்காலமாக கனடாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கான தூதுவராக மூன்று மாதங்களுக்கு முன்னர் கனடா நியமனம் செய்த ஷெல்லி வைற்றிங்கின் நியமனத்தை இலங்கை அரசு இன்னமும் அங்கீகரிக்கவில்லை.
எனினும் அவர் தற்போது கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். மேலும் தற்போது கனடாவில் நடைபெறும் இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்களுக்கான கருத்தரங்கிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
ஒரு நாட்டின் தூதுவரின் நியமனத்தை இன்னொரு நாடு ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தால் மட்டுமே குறிப்பிட்ட தூதுவரால் அதிகாரபூர்வமாக செயற்பட முடியும்.
எனினும் மூன்று மாதங்களாக கொழும்பில் காத்திருந்த கனேடியத் தூதுவர் ஷெல்லிக்கு மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தனது நியமனத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் இலங்கைக்கான பதிலடியாக கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட எசல வீரக்கோனின் நியமனத்தை ஏற்றுக் கொள்வதை கனடா நிறுத்தி வைத்துள்ளது.
கனடாவுக்கான தூதுவராக பணியாற்றிய சித்திராங்கனி வாகீஸ்வரவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னரே எசல வீரக்கோனை அந்தப் பதவிக்கு நியமிப்பது தொடர்பான ஆவணங்களை கனடாவிடம் இலங்கை கையளித்திருந்தது.
தமது தூதுவர், ஷெல்லி வைற்றிங்கின் நியமனத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளும் வரை, எசல வீரக்கோனின் நியமனத்தை ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தி வைத்துள்ளதாக கனடா தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, தூதுவர்களின் நியமனங்களை கையளிக்கும் நிகழ்வு குழுக்களாகவே மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த குழு ஜுலை மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நியமனங்களை கையளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
'இந்தக் குழுவிலேயே கனேடியத் தூதுவர் ஷெல்லி மற்றும் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten