தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

முல்லை. புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்!


தேசியத்தலைவரின் ஆசைகளில் ஒன்று நிறைவேறி இன்று லண்டனில் அறிமுகமாகிறது!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 06:31.38 AM GMT ]
தேசியத்தலைவரின் ஆசைகளில் ஒன்று நிறைவேறி,  திரு.ஜேபி.லூயிஸ் அவர்களின் (MANUAL OF THE VANNI DISTRICTS  எனும் நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று லண்டனில் அறிமுகமாகிறது.
இது கடந்த 30.10.2006ம் ஆண்டு நவம் அறிவுக்கூடத்தில் நடந்த வரலாறுகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களும், தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. பேபி சுப்ரமணியம் அண்ணா அவர்களும் . அப்ப்போது தமிழீழ தொல்பொருளாய்வகப் பொறுப்பாளராக இருந்த திரு யோகி அண்ணா அவர்களும் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் உரை நிகழ்த்திய தேசியத்தலைவர் அவர்கள் எமது வரலாற்றை சொல்ல விழைந்த வெளிநாட்டு ஆய்வாளர்களின் நூல்களை தமிழில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட வேண்டும் என்று கூறியதுடன், திரு.ஜேபி.லூயிஸ் அவர்களின் (MANUAL OF THE VANNI DISTRICTS  எனும் நூல் இதில் முக்கியமானது எனவும் தெரிவித்திருந்தார்.

அவரது விருப்பத்திற்கேற்ற வகையில் இந்நூல் இன்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு லண்டனில் அறிமுகமாகிறது.


முல்லை. புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 06:21.55 AM GMT ]
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான சிவராசா சிவகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள அரச சார்பு அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரே தனது கணவரைக் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் தன்னிடம் கூறியதாக அவரது  மனைவி மேலும் கூறினார்.
குறித்த நபர் கடத்தப்பட்டவரின் உறவினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் கூறியுள்ள போதும் அவர் இதுவரை அங்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten