தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

ஐதேகவின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வது படுபாதகம்! வி.ஆனந்தசங்கரி


வைகோ, சீமான் போன்றோர் இலங்கைத் தமிழர்களை வேதனைப்படுத்துகின்றனர்!- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 07:44.19 AM GMT ]
தமிழகத்தில் உள்ள வைகோ, சீமான் போன்றவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களை வேதனைப் படுத்தி வருகிறார்கள் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் ஈழம் என்று தமிழகத்தில் பேசும் சிலர் இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? மத்திய அரசு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள நல உதவிகளை இலங்கை தமிழர்களுக்கு செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள வைகோ, சீமான் போன்றவர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு கூட எந்த நன்மையும் செய்யாதவர்கள்.
ஆனால் இங்கே பேசி, பேசி இலங்கையில் உள்ள தமிழர்களை வேதனைப் படுத்தி வருகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சனைகள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பேசுவது வேடிக்கையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐதேகவின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வது படுபாதகம்! வி.ஆனந்தசங்கரி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 08:58.08 AM GMT ]
சமஷ்டியைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வது என்பது படுபாதகச் செயலாகும். இவ்வாறு  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஐக்கிய தேசியக் கட்சி 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ்டிக் கொள்கையை முன்வைத்தே போட்டியிட்டது. 49 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்தது.
தந்தை செல்வாவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகச் சமஷ்டியையே முன்வைத்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் ஐ.தே.க சமஷ்டிக் கொள்கையைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக கூறியுள்ளது.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராட்டியிருப்பது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்த தமிழ் மக்களுக்குச் செய்யும் படுபாதகச் செயலாகும்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அறிக்கைகளை விடும் சுமந்திரன் பதவி விலக வேண்டும். அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவரைப் பதவி விலக்க வேண்டும் என்றுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten