[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 11:28.43 AM GMT ]
இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஆளுனராக பதவி வகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வட மாகாணசபைத் தேர்தல்கள் நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் நடத்தப்படுவதற்கும், அச்சமின்றி வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்படுவதற்கும் வேண்டுமாயின் ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
சிவிலியன் ஒருவரே வட மாகாணசபையின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ள அவர், ஆளுனர் பதவியை இராணுவ அதிகாரியொருவர் வகித்து வரும் வரையில் அங்கு சுயாதீனாமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வட மகாணத்தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணசபையிலும் இந்த நிலைமை நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முன்னாள் படையதிகாரி ஒருவரே ஆளுனர் பதவியை வகித்து வருவதாகவும் இதனால் மாகாணசபை நிர்வாகத்திற்கும் ஆளுனருக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்ன செய்யப் போகிறது இந்தியா?
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 11:52.25 AM GMT ]
கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியப் பிரதமர் இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
அதுமட்டுமல்ல 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதி குறித்தும் சந்தேகம் எழுவதாகவும், மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணானது என்ற கருத்தையும் அவர் வெளியிடத் தவறவில்லை.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த போது வெளியிட்ட இந்த மூன்று முக்கிய விடயங்களையும் இந்தியா மறைக்க வேண்டும் எனக் கருதியிருந்தால் மறைத்து விட்டிருக்கலாம்.
ஆனால் அவை வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் மன்மோகன்சிங்கின் கருத்தை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அக்பர்தீன் மூலம் சுருக்கமாக வெளியிட்டது இந்திய அரசாங்கம்.
அதாவது இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் மீது இந்தியா அதிருப்தியை கவலையைக் கொண்டுள்ளது என்ற செய்தியை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம்.
அதுமட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கூட மிகவும் நெருக்கடியானதொரு சூழலில் தான் புதுடில்லிக்கு அழைத்தது இந்திய அரசாங்கம்.
அமைச்சரவை மாற்றம் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் மன்மோகன்சிங் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்க வேண்டிய நிலை வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகை என்று இந்திய வெளிவிவகார அமைச்சும் பிரதமர் அலுவலகமும் இறுக்கமான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருந்த போது தான் கூட்டமைப்பு அங்கு அழைக்கப்பட்டது.
அதுவும் அந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார செயலர் ரஞ்சன் மத்தாய் கூட நாட்டில் இருந்திருக்கவில்லை.
இறுக்கமான நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு இந்தியா நேரம் ஒதுக்கியது மிகவும் முக்கியமானது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பபதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பல நாட்களாக கால்கடுக்கக் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய வரலாறும் உள்ளது.
இப்போது நிலைமைகள் வெகுவாக மாற்றமடைந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை அவசரமாக அழைத்துப் பேசுகின்ற அளவுக்கு இலங்கை அரசாங்கத்தின் போக்கினால் இந்தியா வெறுத்துப் போயுள்ளது.
அதற்காக இலங்கைக்கு எதிராக இந்தியா போர்க்கொடி தூக்கப் போகிறது என்று மிகையான நம்பிக்கைகளையெல்லாம் வளர்த்துக்கொள்ளக் கூடாது.
இலங்கையின் போக்கு இந்தியாவுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லிக்கு அழைக்கப்பட்டது.
அவர்களைச் சந்தித்த சாட்டை வைத்துக் கொண்டு இலங்கை மீதான கவலையையும் கலக்கத்தையும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
ஆனால் இலங்கை அரசாங்கமோ இந்தியாவின் இந்தக் கவலை, கரிசனை அதிருப்தி போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் மசிந்து கொடுக்கின்ற நிலையில் இல்லை. இந்தியாவுக்கு இப்போதுதான் பல விடயங்களில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்ற உண்மை புரியத் தொடங்கியுள்ளது.
13வது திருத்தச்சட்ட விவகாரத்தில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தச் சொல்கிறது இந்தியா.
அதற்கு மேலேயும் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு ஒன்றுக்குப் பலமுறை வாக்குறதிகளைக் கொடுத்திருந்தார்.
ஆனால் புதுடில்லியில் இந்த வாக்குறுதி கொடுத்துவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரும் கொழும்பில் வைத்து சுஷ்மா சுவராஜ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வாக்குறுதி கொடுக்கப்பட்டு அவர்கள் நாடு திரும்பிய பின்னரும் அப்படியேதும் வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என்று குத்துக்கரணம் அடித்தது இலங்கை அரசாங்கம்.
அப்போதெல்லாம் இந்தியா இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருவேளை இந்தியா அப்போதே இதைப் பெரிய விவகாரமாக்கியிருந்தால் இலங்கை அரசாங்கம் இந்தளவுக்குப் போவதைத் தவிர்த்திருக்கலாம்.
அதுபோலவே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட முறை சரியானதல்ல என்று கூறி உயர்நீதிமன்றம் அவற்றைப் பிரிக்க உத்தரவிட்ட போது சரியான முறையில் இணைக்கும்படி இந்தியா அழுத்தம் கொடுக்கவும் இல்லை.
அதற்கும் இந்தியா வழக்கம் போலவே மௌனம் காத்து விட்டு இப்போது ஓடி முழிக்கிறது.
13வது திருத்தச்சட்டத்தை இந்தியாவின் கண்ணுக்கு முன்பாகவே பிரித்தெறியத் தயாராகியுள்ளது இலங்கை அரசாங்கம்.
தமிழர் பிரச்சினைக்கு இந்தியா முன்மொழிந்த தீர்வாதக 13வது திருத்தச்சட்டமே இருக்கும் நிலையில் அதனை திணிக்கப்பட்ட தீர்வு என்று முத்திரை குத்தி பிடுங்கியெறியப் பார்க்கிறது இலங்கை.
13வது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டாலோ அ்லது அதன் முக்கியமான பகுதிகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டாலோ அது இந்தியாவுக்குப் பெருந்தோல்வியாகவே அமையும்.
அத்தகையதொரு நிலையில் இருந்து தப்பிக்கவே இந்தியா இப்போது முற்படுகிறது.
இப்போது இந்தியா 13வது திருத்தத்தை பலவீனப்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கூறினாலும் அதற்குக் காரணம் தமிழர்கள் மீதுள்ள பற்றுத் தான் என்று முழுமையாக கருத முடியாது.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை இலங்கை மீதான பிடி தோற்றுவிடக்கூடாது என்பதே இந்தியாவின் மிகப் பெரிய கவலை.
13வது திருத்தத்தை பலவீனப்படுத்த இந்தியா அனுமதிக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குறதிகள் அள்ளி வீசப்பட்டாலும் அதை இந்தியா எவ்வாறு காப்பாற்றப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால் சீனாவின் உள்வரவால் இலங்கை மீது இந்தியா கொண்டிருந்த செல்வாக்கு தளர்ந்து போய் விட்டது.
கொழும்பின் நிகழ்ச்சி நிரலில் இந்தியா ஒரு விரும்பப்படாத சக்தியாக மாறி வருகிறது. இதனை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கருத்து ஒன்றே உணர்த்தியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் எமது பக்கம் நிற்பதாக கூறிய இந்தியா கடைசியில் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இலங்கையைக் கைவிட்டு விட்டது, அது மோசமான செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்தியா வாக்குறுதியை மீறிய போது அதே வழியில் தாமும் மீறினால் என்ன? என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தனியே கோத்தபாய ராஜபக்சவின் கருத்து மட்டுமல்ல.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கூட ஜெனிவாவுக்கும் 13வது திருத்தத்துக்கும் முடிச்சுப் போட்டுள்ளார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்குறுதியை மீறிச் செயற்பட்டது போல 13வது திருத்த விடயத்தில் தாம் வாக்குறுதியை மீறும் போது இந்தியா மௌனமாக இருக்க வேண்டும் என்றே அரசாங்கம் கருதுகிறது.
ஆனால் இதுவரைக்கும் நடந்தவற்றை வேடிக்கை பார்த்தது போன்று இந்தியாவினால் இந்த விடயத்திலும் வேடிக்கை பார்க்க முடியாது. அது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. இந்தியாவின் கௌரவத்தையும் கூடப் பாதிக்கும்.
இந்தநிலையில் 13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் நகர்வை இந்தியா எவ்வாறு நிறுத்தப் போகிறது? என்பது தான் கேள்வி. இந்தியாவுக்கும் கூட இது ஒரு சிக்கலான பிரச்சினைதான்.
இலங்கை விவகாரத்தைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
அதுவும் ஐநாவுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியான ஹர்தீப் சிங் பூரியை சிறப்பு தூதுவராக நியமிக்க இந்தியா ஆலோசிப்பதாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னமும் உறுதியாகவில்லை. பூரிக்கு இது ஒன்றும் புதிய விவகாரம் அல்ல. 1987 காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றிய அவர், விடுதலைப் புலிகளின் தலைவர்களுடனும் ஜே.ஆர் அரசுடனும் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஆனால் பூரி வந்தாலும் கூட இந்தியாவின் பிரச்சினையையும் தமிழர்களின் பிரச்சினையையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்? என்பது சிக்கலான விடயமே.
ஏனென்றால் அண்மையில் கொழும்பு வந்த பாக தலைவர் யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கின்ற மந்திரக்கோல் இந்தியாவின் கையில் இல்லை என்று குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
அது சரியோ தவறோ இலங்கையைக் கட்டுப்படுத்துகின்ற மந்திரக்கோல் இப்போது இந்தியாவிடம் இல்லை என்பதே உண்மை.
இந்த மந்திரக்கோல் இல்லாமல் பூரி மட்டுமல்ல எவர் வந்தாலும் இந்தியாவினால் எதையும் செய்ய முடியாது.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten