[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 11:38.45 PM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சனியன்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்வது, மீளகுடியேற்றப் பிரதேசங்களில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்ற சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் இந்த உயர்மட்டக் கூட்டம் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் தகவல் நிலையம் ஒன்றை திருகோணமலையில் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பது என்று திருகோணமலை நகரசபை முடிவெடுத்துள்ளது.
கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் காலையில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரையில் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இங்கு முக்கியமாக, பொதுமக்களின் காணிகளை இராணுவ தேவைக்காகக் அரசாங்கம் கையகப்படுத்துவது, இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வது, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்கள் தாயகம் திரும்பி மீள்குடியேறுவது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்துவது, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நடவடிக்கைகள், அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் போன்றவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இங்கு பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதுபற்றி அறிவிக்கும்போது, தாங்களும் அதுபற்றி முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலத்திற்கும் இடையில் பலத்த வாக்குவாதம் நடந்ததாக தெரிவிக்கப்படுவது குறித்து கேட்டபோது, அத்த்கைய வாக்குவாதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று மாவை சோனாதிராஜா தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் பல விடயங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அவற்றுக்கு தாங்கள் உரிய விளக்கம் அளித்ததாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அமெரிக்கா- திருகோணமலை நகரசபை உடன்படிக்கை இடைநிறுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 12:07.39 AM GMT ]
இந்த உடன்படிக்கை சட்டரீதியற்றது என்று வெளியுறவு அமைச்சு தமக்கு அறிவித்தமையை அடுத்தே இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக நகரசபையின் செயலாளர் அப்துல் லத்தீப் நபீல் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் குறித்த உடன்படிக்கைக்கு அனுமதி பெறப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணசபையும் நகர சபைக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அமெரிக்காவின் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அண்மையில் அமரிக்க தூதரகம் திருகோணமலை நகரசபையுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டது.
இதேபோன்ற நிலையங்கள் தொடர்பில் அமெரிக்கா, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்திருக்கிறது.
இந்தநிலையில் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் அமெரிக்காவுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சின் செயலாளர் அமுனுகம கருணாதிலக்க தெரிவித்துள்ளார் .
இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு தெரியாமலேயே இந்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க தூதரகத்தில் இருந்தும் இது தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten