கனடாவில் 23 வயது மிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸ் கைது
கனடாவில் ஒண்டோரியாவிலுள்ள பீல் ரீஜியன்(Peel Region) என்ற பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது.
23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை உண்டாக்கிய பீல் ரீஜியன் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி Abel Gomes என்பவரை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யும்போது கூட அவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார சம்பவம் டிசம்பர் மாதம் 2012ம் ஆண்டு 14ம் திகதி நடந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு நேற்று ஒண்டோரியோ நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், மீண்டும் யூன் மாதம் 24ம் திகதி ஆஜராகவேண்டும் என்ற உத்தரவாதத்துடன் இந்த பிணை அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளிற்கிணங்க பெண்ணின் பெயர் மற்றும் முகவரி வெளியிடப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இலங்கையில் வர்த்தக நிறுவனங்களாக மாறும் தனியார் வைத்தியசாலைகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 12:01.53 AM GMT ]
நாரஹேன்பிட்டியவிலுள்ள தேசிய இரத்த நிலையம் தனியார் வைத்தியசாலைகளுக்கு ஒரு அலகு அல்லது ஒரு பக்கெட் இரத்தத்தை 1,100 ரூபாவுக்கு மாத்திரமே விற்பனை செய்கின்றது.
ஆயினும் தனியார் வைத்தியசாலைகள் அந்தப் பக்கெட் இரத்தத்தை நோயாளிகளுக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கும், வேறு சில தனியார் வைத்தியசாலைகள் 30 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்து ஒரு பக்கெட்டில் மாத்திரம் 18 ஆயிரம் ரூபா முதல் 28 ஆயிரம் வரை கொள்ளை இலாபம் திரட்டுவதாக அங்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கலாய்க்கிறார்கள்.
அது போன்று தனியார் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை, மருத்துவ சிகிச்சை பிரசவம், பரிசோதனைகள் போன்ற அனைத்துக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தை நோயாளிகளிடமிருந்து அறவிடுகின்றன.
அரசாங்க வைத்தியசாலைகளை விட தனியார் வைத்தியசாலைகளில் சிறந்த பராமரிப்பும் வைத்திய சிகிச்சையும் இருப்பதனால் அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கியிருந்து நோயைக் குணமாக்குவதற்கு முடியாத நிலையில் உள்ள செல்வந்தர்கள் மட்டுமின்றி சராசரி வருமானம் பெறுபவர்கள் கூட தனியார் வைத்தியசாலைகளை தங்கள் நோயைக் குணமாக்குவதற்கு நாடிச் செல்கின்றனர்.
இதற்கென அவர்கள் கைவசம் இருக்கும் பணத்தை செலவிட்ட பின்னர் மேலதிகமாக கடன்பட்டு தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.
இது பற்றி சுகாதார அமைச்சின் அதிகாரியொருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தனியார் வைத்தியசாலைகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
அவரது கூற்று உண்மையாகவிருந்தால் அரசாங்கம் ஏன் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி தனியார் வைத்தியசாலைகளை கண்காணிப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியாது என்று இந்த வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்கள் வினா எழுப்புகிறார்கள்.
நம் நாட்டு மக்களை நோயிலிருந்து காப்பாற்றி உடல் நலத்துடன் வாழ்வதற்கு வழி வகுக்கும் முகமாகவே அரசாங்கம் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசாங்க வைத்தியசாலைகளை ஏற்படுத்தின.
1960ஆம் தசாப்தம் வரை எமது அரசாங்க வைத்தியசாலைகள் சுகாதாரத் திற்கேற்புடைய வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை சிறப்பாக நிறைவேற்றின. ஆயினும் காலப்போக்கில் அரசாங்கத்தை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அரசாங்கம் வழமையாக ஒதுக்கிய நிதி குறைக்கப்பட்டது.
அதனால் நான்கு நாளைக்கு ஒரு தடவை நோயாளிகளின் கட்டில் விரிப் புகள் மற்றும் தலையணை உறைகள் சலவை செய்யும் முறை கைவிடப் பட்டு அவை இரண்டு மூன்று வாரங்களுக்கு நோயாளிகள் மாறினாலும் அவை மாற்றப்படாத நிலையில் இருக்கும். இதனால் நோயைக் குணப்படுத்துவதற்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளில் சிலருக்கு வேறு நோய்களும் தொற்றுவதுண்டு.
இத்தகைய சூழ்நிலையில் அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அசெளகரியமான நிலையில் சிகிச்சை பெற விரும்பாதவர்ககளுக்கு சிகிச்சை பெற உதவும் முகமாக அரசாங்கங்கள் தனியார் வைத்தியசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்தது.
இதன் அடிப்படையில் 1920ம் ஆண்டு தசாப்தத்தில் யூனியன் பிளேஸில் முதல் தடவையாக ஒரு தனியார் ஆஸ்பத்திரி இரத்னம் வைத்தியசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அதையடுத்து டாக்டர் எம். சி. எம். கலீல் தனியார் வைத்தியசாலை மருதானையில் ஆரம்பிக்கப்பட்டது. சில காலத்துக்குப் பின்னர் கொழும்பு கிராண்ட்பாஸில் சுலைமான் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பல செல்வந்தர்கள் பாரிய அடிப்படையில் தனியார் ஆஸ்பத்திரிகளை நாடெங்கிலும் குறிப்பாக கொழும்பு மாநகரத்திலும் ஆரம்பித்தனர்.
அன்றைய காலகட்டத்தில் இந்த தனியார் வைத்தியசாலைகள் நியாயமான கட்டணத்தையே அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து அறவிட்ட போதும் அவர்களுக்கு சிறந்த வசதிகளுடன் வைத்திய சிகிச்சையைக் கொடுத்து நோய்கள் குணமாக்கப்பட்டன.
இந்த தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் புறம்பான அறைகளின் தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசி வசதி, மற்றும் குளிரூட்டும் வசதி அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டதனால் ஓர் அறைக்கு 8 முதல் 10 ஆயிரம் ரூபா வரை நாளொன்றுக்கு கட்டணமாக பெறப்பட்டது.
அத்துடன் மருந்து, சத்திர சிகிச்சை வசதிகளுக்கும் பெருமளவு பணம் கட்டணமாக அறவிடப்பட்டது. இதனால் ஒரு நோயாளி சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இருதய சத்திர சிகிச்சை செய்பவர்கள் 5 முதல் 6 இலட்சம் ரூபாவரை செலவிட வேண்டியிருக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten