[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 07:57.31 AM GMT ]
யாழ்.நகரில் ஏற்கனவே சிங்கள மகா வித்தியாலயத்தின் காணியில் பாரிய தளமொன்று நகரின் மத்தியிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் இத்தளமும் அமைக்கப்படுகின்றது.
இலங்கை கொடியுடன் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து கேரள மாநில கடற்றொழில் அமைப்புகளும் படகு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சிறிய படைமுகாமாகக் காணப்பட்ட இம்முகாமானது தற்போது மிகப்பெரிய தளமாக மாற்றப்படுகின்றது.
இதற்காக முழுமையாக இராணுவத்தினர் இரவு பகலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தோடு இத்தளத்திற்கு பெருமளவான இராணுவத்தினர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலும் கோட்டையில் ஏற்கனவே இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் கடற்கரையோரமாக இராணுவத்தினர் இரண்டு கிலோ மீற்றருக்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகின்றது.
இவ்வாறு இராணுவத்தினர் பாரிய தளமொன்றை மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த குருநகர் பகுதியில் அமைக்கப்படுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கொடியுடன் சீன மீன்பிடி கப்பல்கள்! கேரள மீனவ அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 06:49.42 AM GMT ]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொதுக் கடற்பிராந்தியத்தில் சீன மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடிப்பதால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்படுவர் என்று இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தப் பகுதியில் உள்ள 4000 சதுர மைல் பரப்பளவான, கடற்படுகையின் மீன்வளங்கள் முழுவதையும், 150 அடி நீளமுள்ள சீனக்கப்பல்கள் அழித்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே ஆழ்கடல் மீன்வளங்கள் அழிந்து போயுள்ளதால், இந்தியாவின் மீன் உற்பத்தி கடுமையாக சரிவடைந்துள்ளது என்றும் சீனக் கப்பல்களின் வருகையால் இது மேலும் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten