தமிழ் தேசிய கூட்டமைப்பு டில்லியில் பேசினாலும் இலங்கை - இந்திய உறவில் பாதிப்பு ஏற்படாது! அமைச்சர் தினேஷ்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:13.31 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு குந்தகமாக அமையாதென்பதில் இலங்கை அரசாங்கம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
தமிழகத்தின் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் படை அதிகாரிகள் இருவரையும், வேறெந்த பயிற்சி கல்லூரிக்கும் இடம்மாற்றுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையே காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நட்புறவு ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சூழல் தொடர்ந்தும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார செயலாளர் ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தியிருப்பதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
இப்பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா சென்றிருப்பது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் பல தடவைகள் இந்தியாவுக்குச் சென்று சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினரின் பிரதிநிதிகளாகவே இவர்கள் இந்தியா சென்று வருகின்றனர்.
மோதல்களின் போது எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் தலைவர்களும் தலைவிகளும் உயிரிழந்தமைதான் இவர்களுக்கு இன்னமும் பிரச்சினையாக உள்ளதே தவிர, வடக்கை மக்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை நிலையாக தக்கவைத்துக் கொள்வது பற்றி இவர்கள் சிறிதும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.
வடக்கே மக்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் சுதந்திரமாக வாழ்கின்றனர். இதனை மீண்டும் போராட்ட மாக்குவதற்கே இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் விரும்புகின்றனர் போல் தெரிகிறது.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் மூலம் நாட்டில் தக்கவைத்துள்ள ஜனநாயக த்தை சீர்குலைக்கும் வகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் சிறந்த தீர்வினை எட்ட முடியும்.
ஆனால் கூட்டமைப்பு எம்.பி.க்களே சம்பந்தப்பட்டவர்களுடன் உள்நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதனை விடுத்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்கின்றனர்.
இது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும். சர்வதேச ரீதியான சதிகாரர்கள் மீண்டும் நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவிக்கத் தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பினர் இவ்வாறான செயல்பாடு களில் ஈடுபடுகின்றனர்.
பயிற்சிபெறும் வீரர்களை வேறு முகாமுக்கு மாற்ற இலங்கை இணங்காது! இந்தியாவை மிரட்டும் கோத்தா
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:01.37 AM GMT ]
இலங்கை படை வீர்ர்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு, தமிழக அரசும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் இரு படை அதிகாரிகளையும் புனேயில் உள்ள இராணுவத் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரிக்கு இடம்மாற்றும் யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது.
இதுகுறித்த இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச, இன்னொரு பயிற்சிக் கல்லூரிக்கு இலங்கை படை அதிகாரிகளை இடம்மாற்றும் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் இணங்காது என எச்சரித்துள்ளார்.
படை அதிகாரிகள் ஒரு ஆண்டு பயிற்சிநெறியை வெலிங்டனில் தொடர முடியாமல் போனால், அவர்களை இலங்கை பெரும்பாலும் திருப்பி அழைக்கும்.
விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இந்திய -இலங்கை உறவுகளைக் சீர்குலைக்க முனைகின்றன.
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நேரத்தில், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இலங்கை படை அதிகாரிகளுக்கு கதவடைக்கப்படுவது மோசமான பின்னடைவாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
வீரர்களை திருப்பி அனுப்புங்கள்: இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை
கடும் எதிர்ப்பு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு 2 இலங்கை வீரர்களை வேறு பயிற்சி மையத்துக்கு மாற்றலாமா? என்று ஆலோசித்தது. ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள இராணுவ பயிற்சி மையத்துக்கு மாற்ற முடிவு செய்து இதுபற்றி இலங்கை அரசின் கருத்தை கேட்டது.
ஆனால் செகந்திராபாத்துக்கு எங்கள் வீரர்களை மாற்ற வேண்டாம், இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று இலங்கை அரசு கூறி விட்டது.
இதுபற்றி இலங்கை இராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியதாவது:-
வெலிங்டனில் பயிற்சி பெறும் 2 வீரர்களையும் செகந்திராபாத் மாற்றலாமா? என்று இந்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
இலங்கை வீரர்கள் இருவரும் மிகவும் இளைய வயதினர். அவர்கள் செகந்திராபாத் இராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சிபெற தகுதி உடையவர்கள் இல்லை.
எனவே அவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி விடுங்கள் என்று இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten