தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

இலங்கை “இன்னொரு பாக்கிஸ்தான்” ஆக இந்தியா விரும்பவில்லை: சுதர்சன் நாச்சியப்பன்!

மாத்தளை நீதவானுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 02:19.21 AM GMT ]
மாத்தளை நீதவானுக்கு திடீர் இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பாரிய மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகளை நீதவான் சதுரிகா டி சில்வா மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், திடீரென உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதவான் சதுரிகா டி சில்வா கொழும்பு புதுக்கடை நீதி மன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றின் மேலதிக நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதவான் சதுரிகா டி சில்வா நாளை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
2010ம் ஆண்டு முதல் நீதவான் சதுரிகா மாத்தளை நீதவானாக கடமையாற்றி வந்தார்.
இதேவேளை, மாத்தளை மனித புதை குழி தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை “இன்னொரு பாக்கிஸ்தான்” ஆக இந்தியா விரும்பவில்லை: சுதர்சன் நாச்சியப்பன்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 04:13.23 AM GMT ]
இலங்கை இன்னொரு பாகிஸ்தானாக மாறுவதை இந்தியா விரும்பவில்லை என இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
குன்னூர், வெலிங்டனில் இலங்கை படைஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து, கருத்து வெளியிட்டும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்
இலங்கைப் படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இந்தியா மறுப்புத் தெரிவித்தால், அவர்கள் சீனாவுக்கு அனுப்புவார்கள்.இலங்கைக்கு எதிராக இந்திய எந்த தீர்மானத்தை மேற்கொண்டாலும், இந்தியாவை தவிர்த்து இலங்கைக்கு சீனா மாற்று தெரிவாக உள்ளது.
எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம், இலங்கை அரசாங்கத்துடன் சமரசமாகத் தான் செல்ல வேண்டும். அது இந்தியாவின் எதிரிகளைப் பலப்படுத்துவதாக அமையும்.
இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானால் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இன்னொரு பாகிஸ்தானாக இலங்கை உருவெடுப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது.
தமிழர்களினதும் அவர்களிது சொத்துக்களினதும் பாதுகாப்பையும் இந்தியா கவனத்தில் கொள்கிறது. இந்த விவகாரம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிரான எந்த தீர்மானங்களையும் மீட்பதற்கு முன்னதாக, இந்திய- இலங்கை உறவு குறித்தும், தமிழ் மக்களின் நலன் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் இலங்கை விடயத்தில் இந்தியா எந்த தீர்மானத்தை மேற்கொண்டாலும், அது இலங்கையில் உள்ள தமிழர்களையும், இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களையும் பாதிப்பதாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten