தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

இலங்கையில் ஆட்கடத்தலின் பின்னணியில் அரச அதிகாரிகள்: அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கை அணியின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்கனவே அரசாங்கம் எச்சரித்திருந்தது: கருணாதிலக்க அமுனுகம
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 01:14.20 AM GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தது.
இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு எதிராக மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அனுமுகம இதனை தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சுலோகங்கள் காட்டப்பட்ட அதேநேரம் ஆட்டம் முடிந்த பின்னர் இலங்கை அணியினர் பயணம் செய்த பஸ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மறிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர் பிரசன்னமான நிலையிலேயே இந்த அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் ஆட்கடத்தலின் பின்னணியில் அரச அதிகாரிகள்: அமெரிக்கா குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 01:05.42 AM GMT ]
இலங்கையில் இருந்து ஏனைய நாடுகளுக்கு ஆட்கள் சட்டவிரோதமாக செல்லும் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் அரச அதிகாரிகளும் உதவி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
2013ம் ஆண்டுக்கான தமது ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் சட்டவிரோதமாக நாடுகளுக்கு ஆட்கடத்தல்களில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த வருடத்தில் இலங்கை அரசாங்கம் இவ்வாறான ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் குறித்தளவு முன்னேற்றத்தையே காட்டியது என்றும் அமரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் சட்டங்களும் இலங்கையில் போதுமானதாக இல்லை என்று அமெரிக்கா குறைகூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten