[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 10:06.46 AM GMT ]
என்றாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நாளும், பொழுதும் விசாரணை என்ற பெயரில் அழைப்பதானது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கடமையைச் செய்வதைத் தடுப்பதற்கு ஒப்பானதாகும்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு மனிதர் என்ற முறையில் தொடர்ச்சியான மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமல்ல அவரையும் ஜனநாயக ரீதியில் அவரைத் தெரிவு செய்த மக்களின் ஜனநாயக உரிமைகளையும், ஜனநாயக அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும்.
அரசின் உளவுத்துறை மக்களை மட்டுமல்ல ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது கடமையைச் செய்வதைத் தடுப்பதற்கு பயன்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிளிநொச்சியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு முழுவதும் காணிச்சட்ட திட்டங்களுக்கு விரோதமாகவும் ஜனநாயக அடிப்படை உரிமைச் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் மக்களின் காணிகளை பட்டவர்த்தனமாக பகற்கொள்ளை போல் அபகரித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அந்தக் காணி உரித்துள்ளவர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரித்தான பொறுப்பும், கடப்பாடுமாகும்.
அந்த உரிமையில் உளவுத்துறையினர் தலையிடுவது என்ன நியாயம்? இதற்குக் கட்டளையிட்டது யார்? இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இத்தகைய செயலை கண்டித்து நாம் எதிர்வரும் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவோம். சர்வதேச பாராளுமன்றத் தலைமைக் கூட்டமைப்பிடம் (Inter Parliamentary Union) முறையிடவுள்ளோம்.
சர்வதேச மனிதஉரிமைப் பேரவைக்கும் அறிவிக்கவுள்ளோம்.
மாவை.எஸ்.சேனாதிராசா.பா.உ
துணைத்தலைவர்,
பாராளுமன்றக்குழு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
மாவை.எஸ்.சேனாதிராசா.பா.உ
துணைத்தலைவர்,
பாராளுமன்றக்குழு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
உதயன் பத்திரிகை மீதான தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர்?: கோவிந்தன் கருணாகரம்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 09:11.12 AM GMT ]
உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் முழுமையான விசாரணை நடவடிக்கையெடுக்காமை அதன் தாக்குதல்களின் பின்னணியை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலமாக ஊடங்கங்கள் மீதும் சில அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உண்மை நிலையை வெளிக்கொணரும் ஊடகங்கள் மீதும் மக்களின் உரிமையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வட பகுதியில் இருந்து வெளிவரும் பத்திரிகை உதயன் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களும் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றமையானது இந்த நாட்டின் ஜனநாயக தன்மையினை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இன்று ஊடக அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் பின்னிற்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஊடகத்தின் மீதான தாக்குதல் அதன் உண்மைத்தன்மையினை வெளிக்காட்டி நிற்கின்றது.
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அந்த கடமையை இன்றுவரை நிறைவேற்றாமல் இருப்பதானது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தெளிவாக காட்டி நிற்கின்றது.
எனவே ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten