[ சனிக்கிழமை, 04 மே 2013, 03:26.26 AM GMT ]
கனேடிய புலிகள் வலையமைப்பு பிரபாகரனுக்கு பணம் அனுப்பி வைத்திருந்ததாக சிங்களப் பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுலைப் புலிகள் வலையமைப்பிற்கு கனடாவிலிருந்து சுவிட்சர்லாந்து ஊடாக 200 மில்லியன் டொலர்கள் பிரபாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கையின் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான முஸ்லிம், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கனடா கண்டித்துள்ளது.
இது தொடர்பில் கனேடிய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்த வேண்டாம் என தற்போது கனடா கோரி வருகின்றது.
ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் டொலர் தேவை என கனேடிய புலிகள் வலையமைப்பிடம் பிரபாகரன் கோரியதாகவும், அந்தப் பணம் ஆயுத முகவர் ஒருவருக்கு அனுப்பி வைக்க்பபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஆதாரங்களை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நடாத்தி வருகின்றனர்.
கனேடிய தமிழ் காங்கிரஸிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அசாத் சாலி விடுவிக்கப்படவேண்டும்! - கனடா கோரிக்கை
[ சனிக்கிழமை, 04 மே 2013, 01:32.47 AM GMT ]
கனடாவின் மத சுதந்திரம் தொடர்பான தூதர் அன்றூ பேனாட் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் மற்றும் மசத சுதந்திரம் தொடர்பில் குரல் கொடுத்து வந்த அசாத் சாலி உடனடியாக தடுப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்.
அதன் மூலம் இலங்கையில் மதங்களுக்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் நிலைநாட்டவேண்டும் என்றும் அன்றூ பேனாட் கோரியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten