தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

இந்தியாவில் அதிகாரமிக்கவர்கள் மன்மோகன், சோனியா, ப.சிதம்பரம் !


இந்தியாவில் அதிகாரமிக்கவர்கள் மன்மோகன், சோனியா, ப.சிதம்பரம்

இந்தியாவில் அதிகாரமிக்கவர்கள் பட்டியலில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘பாரீன் பாலிசி’ என்ற இதழ் வெளியிட்டுள்ள உலக அளவில் 500 அதிகாரமிக்க நபர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மத குருக்கள் பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பா.ஜ. தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், ரா உளவுப் பிரிவு அதிகாரி அலோக் ஜோஷி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மும்பை மேயர் சுனில் பிரபு, அம்னெஸ்டி அமைப்பின் செயலாளர் சலில் ஷெட்டி ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியப் புள்ளிகள்.
பாகிஸ்தானில் இருந்து ராணுவ தலைமை தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி, ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு தலைவர் ஜாஹீர் உல் இஸ்லாம், பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத், கராச்சி நகர நிர்வாகி சையத் ஹசீம் ரசா ஜைதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் சீனாவில் இருந்து 30 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். புத்த மதத்தலைவரான தலாய் லாமாவும் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பட்டியலில் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten