அமைச்சர்களின் மின்சார கட்டணங்களை நாளிதழ்களில் பகிரங்கப்படுத்துங்கள்!- பிக்குகள் முன்னணி சவால்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த முன்னணியின் செயலாளர் தீனியாகலை பாலித்த தேரர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் தெளிவு பெற்றுக்கொள்ளவதற்காக நாளேடுகளில் அமைச்சர்களின் மின்சார கட்டணப் பட்டியல் வெளியிடப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
102 அமைச்சர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அனைவரும் தலா 2 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாக மின்சார கட்டணத்தை செலுத்துகின்றார்கள்.
அவர்களின் அமைச்சரவைக்கான மின்சார கட்டணமாக இருந்தால் பரவாயில்லை, மக்களுக்கான சேவை இடம்பெறுவதால் அதனை நாட்டு மக்கள் செலுத்துவார்கள்.
ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணி என்ற வகையில் அனைத்து அமைச்சர்களுக்கும் சவால் விடுப்பதாக பாலித்த தேரர் குறிப்பிட்டார்.
மின்சார கட்டணம் தொடர்பான தர்க்கம், விவாதம், விளக்கம், கருத்து வெளிப்பாடு, கணக்கெடுப்பு, ஊழல், மோசடி என்று எந்த விடயமும் அவசியம் இல்லை.
அடுத்த வாரம் வெளியாகும், நாளிதழ்களில் அமைச்சர்கள் தமது வீட்டு பாவனை மின்சார கட்டணத்தை பெயர், அமைச்சரவை, மற்றும் விபரங்களுடன் வெளியிடவேண்டும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்களின் கூட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட எதிர்கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, 1993 ஆம் ஆண்டு மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பின் தற்போதைய அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த வருடம் முறையாக செயற்படாத 46 அரச நிறுவனங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டன.
அவ்வாறே, தமது ஒப்பந்தம் முறையாக இல்லை என்றால் இலங்கை மின்சார சபையையும், சுவீகரித்துக் கொள்ள இயலும்.
உண்மையை மறைக்கவே தற்போதைய அரசாங்கம் முயல்வதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தினார்.
Geen opmerkingen:
Een reactie posten