கொலையாளிகள் இருவரும் நினைத்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் பொலிசார் வரும்வரை அங்கேயே நின்றுள்ளார்கள். இறுதியில் பொலிசார் அவர்கள் இருவரையும் சுட்டு, கைதுசெய்துள்ளார்கள். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் ஒருவர் சமீபத்தில் சோமாலியா சென்று, அங்குள்ள முஸ்லீம் தீவிரவாத அமைப்புடன் பேசியுள்ளார். இதனை பிரித்தானிய உளவுத்துறையான எம்.ஐ 6 உறுதிசெய்துள்ளது. எம்.ஐ 6 தகவலின் படி அவர்கள் சுமார் 2,000 பேரை பிரித்தானியாவில் கண்காணித்து வருகிறார்களாம்.
அவர்களில் இன் நபரும் ஒருவர் ஆவார். கொலையாளி இராணுவ வீரரை கொலைசெய்துவிட்டு, அங்கே சென்றுகொண்டு இருந்த நபர் ஒருவரிடம் தான் சொல்வதை வீடியோ எடுக்குமாறு கோரியுள்ளார். அவரும் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனை முதன் முதலாக ஐ.ரிவி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten