[ சனிக்கிழமை, 04 மே 2013, 12:33.33 PM GMT ] [ விகடன் ]
வேலாயுதம் தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட தயா மாஸ்டர், ஆங்கில ஆசிரியர். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டவர்.
இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், 2009 ஏப்ரல் 22-ம் தேதி தயா மாஸ்டரும், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜேர்ஜ் என்பவரும் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
பிறகு, யாழ்ப்பாணத்தில் இருந்து செயல்படும் 'டான்� டி.வி-யில் வேலைக்குச் சேர்ந்தார். டான் டி.வி-யின் பொறுப்பாளராக இப்போதும் பணிபுரிகிறார்.
வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடமாகாண முதல்வர் பதவிக்குத் தயா மாஸ்டர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
பிள்ளையான் முதல் கருணா வரை எத்தனையோ பேர், புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி அரச ஆதரவாளர்களாக மாறியிருக்கின்றனர்.
ஆனால், இதுவரை யாரும் ராஜபக்சவின் கட்சியிலேயே சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது இல்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரகாந்தன் கூட, 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்� கட்சி சார்பாகவே போட்டியிட்டார்.
தயா மாஸ்டர்தான் முதல் முறையாக இவ்வாறு போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தயா மாஸ்டர், ''முன்னாள் விடுதலைப் புலிகளின் விடுதலைக்கும், நல்வாழ்வுக்குமே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
ஆளும் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கும் இதுவே காரணம்.
ஏற்கெனவே இங்குள்ள தமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு சரிவர உதவிகள் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பதவி எப்படி எல்லாம் பேசவைக்கிறது!
புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிப்பவரின் காணி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கென அபகரிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 12:00.05 AM GMT ]
சாவகச்சேரி, கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் கச்சாய் வீதியில் உள்ள 140 பேர்ச் காணியே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணியின் நான்கு பக்க எல்லைகள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வெளி நாடொன்றில் தங்கியுள்ள ஒருவரின் பெயரில் உள்ள காணியே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளது.
இவரது காணிக்கு அருகில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிலேயே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
முல்லை-வலைஞன் மடத்தில் மீனவர் காணிகள் இராணுவத்தால் பறிப்பு
வலைஞர்மடம், புதையப்பிட்டியில் 1973ஆம் ஆண்டு முதல் கரைவலைப்பாடு தொழில் மேற்கொண்டிருந்த மீனவக் குடும்பங்களின் நிலத்தைத் தற்போது படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக ஆக்கிரமித்துள்ளமையால் அந்தக் குடும்பங்கள் மீளவும் தொழில் செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
போரினால் முற்றாக அழிந்து போன தொழிலை மீள ஆரம் பிப்பதற்காகப் பல லட்சம் ரூபா கடனாகப் பெற்று தொழில் செய்ய வந்துள்ள நிலையில், எமது நிலத்தைப் படையினர் தரமறுத்து அராஜகம் செய்கின்றனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் உடப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி மாதம் முதல் ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப் பகுதிகளில் முல்லைத்தீவின் வலைஞர்மடத்தில் கரைவலை தொழிலை 1973ஆம் ஆண்டு செய்து வருகின்றனர்.
1982ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட உதவி அரச அதிபரினால் இந்த 40 குடும்பங்களுக்கும் தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்தப் பகுதியில் தென்னந்தோட்டம், கிணறு, கட்டட வசதிகள் என்பன மீனவர்களால் அமைக்கப்பட்டிருந்தன. இறுதிக் கட்டப் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் பருவகாலம் முடிந்ததைத் தொடர்ந்து மீனவக் குடும்பங்கள் உடப்பு பிரதேசத்துக்குத் திரும்பியிருந்தன.
போரின் பின்னர் மேற்படி மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடற்கரைப் பிரதேசம் மற்றும் அவர்களின் பல லட்சம் ரூபா பெறுமதியான கட்டடங்கள், தென்னந்தோட்டம் என்பனவற்றை ஆக்கிரமித்துப் படையினரின் 14வது விஜயபாகு படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தமது தொழிலை ஆரம்பிப்பதற்காக முல்லைத்தீவுக்கு வந்து குறித்த படைமுகாமின் அதிகாரியுடன் மீனவர்கள் கலந்துரையாடியதைத் தொடர்ந்து அவர் வாய்மொழி மூலமாக மீனவத் தொழில் தொடங்க அனுமதி வழங்கியிருந்தார்.
இதற்காகப் பல லட்சம் ரூபா கடன்பட்டு தொழில் உபகரணங்களுடன் இரண்டு லொறிகளில் 30 மீனவக் குடும்பங்கள் கடந்த 18ம் திகதி தொழில் செய்ய வந்தபோது படையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
பின்னர் முள்ளிவாய்க்கால் தலைமை இராணுவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டபோது அவரது உத்தரவுக்கு அமைய, மீனவர்களின் சொந்த கரைவலைப்பாட்டை விட்டு வெளியே படைமுகாம் பிரதேச வேலிக்கு அப்பால் 200 மீற்றர் தூரத்தில் வாடிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பாலைவனம் போன்ற வெட்ட வெளியில் இந்த மீனவர்கள் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அந்த மீனவர்களின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து குடிதண்ணீர் எடுக்கக் கூட படையினர் அனுமதிக்கவில்லை.
தற்போது படையினர் மீன்பிடிக்க அனுமதித்த பிரதேசங்களில் கற்பாறைகள் காணப்படுவதால் கரைவலைத் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே தாம் முன்னர் தொழில்செய்த இடங்களில் தொழில் செய்ய அனுமதிப்பதோடு, தமது இடங்களை மீளக் கையளிக்குமாறு அந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten