[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 12:33.05 PM GMT ]
நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்த போதே பிரதம நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார்.
நியாயமான காரணமின்றி தன்னைக் கைது செய்த பொலிசார் இரண்டு மணிநேரத்துக்குப் பின்னர், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களுமின்றி தன்னை விடுவித்து விட்டதாக மனுதாரர் வழக்கில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் சார்பில் ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணி மனுதாரருக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாகக் கூறினார்.
எனினும், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரதம நீதியரசர் இருதரப்புக்கும் இடையிலான பிணக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், பொலிசாரின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு திருப்தியடைய முடியாது என்று கூறினார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நீதியரசர் மொஹான் பீரிஸ், இவ்வாறான சிறிய சம்பவங்களால் கூட அந்த சமாதான சூழல் சீர்குலைந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
எனவே, சம்மந்தப்பட்ட பொலிசார் மனுதாரரிடம் நீதிமன்றத்தின் முன்னால் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்த மொஹான் பீரிஸ், அன்றைய தினம் மன்னிப்புக் கோருவதற்காக சம்பந்தப்பட்ட பொலிசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அரசதரப்பு சட்டத்தரணிக்கு அவர் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் நிதி உதவி தேவையில்லை!- ரவூப் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:18.12 PM GMT ]
அமெரிக்காவின் நிதி உதவியை பெற்றுக்கொண்டால் அது நாட்டின் இறைமையை பாதிக்கும். அதனால் அந்நாட்டின் நிதி உதவி தேவையில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை மேம்படுத்த அமெரிக்கா 3.5 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருந்தது.
எனினும், இந்த உதவித் திட்டத்தில் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய நிலையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாகவே நிதி உதவியை நிராகரித்தோம் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியதனால் உதவிகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten