தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

நீதிமன்றக் கட்டமைப்பை பிழையாக வழிநடத்தவில்லை: துமிந்த குடும்பத்தினர் வெளியிட்ட ஆதாரங்கள்


தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் பிரஜை, சுங்க அதிகாரிகளால் கைது
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 10:47.45 AM GMT ]
பாகிஸ்தானில் இருந்து உருளைகிழங்கு கொள்கலனில் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் மருந்துக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜையான இன்று நண்பகல் 12.30 மணியளவில் புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைகிழங்கு கொள்கலனில் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்படும் 300 லட்சம் ரூபா பெறுமதியான 30,000 மருந்து குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்து குப்பிகளுடன் இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிரதான சந்தேகநபரான பாகிஸ்தான் பிரஜை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


நீதிமன்றக் கட்டமைப்பை பிழையாக வழிநடத்தவில்லை: துமிந்த குடும்பத்தினர் வெளியிட்ட ஆதாரங்கள்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 11:17.34 AM GMT ]
நீதிமன்றக் கட்டமைப்பை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிழையாக வழிநடத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் துமிந்த சில்வா, நவலோக வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பம் தொடர்பில் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில் துமிந்த சில்வா நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தார் எனவும், அதற்கான ஆதாரங்கள் புகைப்படங்கள் என்பனவற்றை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
துமிந்த சில்வாவை நீண்ட இடைவேளைக்கு பின்னர் பார்த்த அவரது ஆதரவாளர்கள் கட்டுக்கு அடங்காத வகையில் தங்களது அன்பை வெளிப்படுத்தியதாகவும், இவ்வாறான ஓர் வரவேற்பையோ அல்லது ஆதரவினையோ தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு துமிந்தவை ஆதரவாளர்கள் சூழ்ந்து கொள்வதானது அவரது உடல் நிலைமைக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றை பிழையாக வழிநடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துமிந்தவின் உடல் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்குமாறு சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten