தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

நாவற்குழியில் மீண்டும் சிங்கள மக்கள் வந்து இறங்கினார்கள்: வீடுகள் அமைக்கப்படுகிறது !


நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடமைக்கும் நடவடிக்கைகளைக் கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இப் பிரதேசத்துக்கு மேலதிகமாக இன்னும் பல சிங்களவர்கள் வந்து இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான, நாவற்குழியில் அமைந்துள்ள காணியில் கடந்த 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 78 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்தன. ஆரம்பத்தில் இந்தக் குடும்பங்கள் கொட்டில்கள் அமைத்துச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். பின்னர் அந்தக் காணிகளுக்குரிய உறுதிகள் வழங்கப்படாமலும் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாமலும் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருந்தனர்.

இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தப் பணிகளை அவர்கள் இடைநிறுத்தியிருந்தனர். எனினும் தற்போது அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது சில குடும்பங்கள் மாத்திரமே தங்கியிருந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், மேலும் சில சிங்களவர்கள் அங்கே வந்துசெல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten