[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:42.04 AM GMT ]
கைக்குண்டுகள், மிதிவெடிகள், இரவைகள் மற்றும் சுடுகலன் உதிரிப்பாகங்கள் போன்றவையே சின்னக்காவத்தை எனும் இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி, திக்கம் பிரதேசத்தில் படையினரின் தேவைக்காகச் சுவீகரிக்கப்படும் காணியை அளவீடு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்ற நில அளவை திணைக்களத்தினர் காணி உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பினால் நில அளவைப் பணியைக் கைவிட்டுத் திரும்பினர்.
இவை அனைத்தும் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
படைகளுக்கு காணியா? திக்கத்தில் கடும் எதிர்ப்பு! அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:34.08 AM GMT ]
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/400 கிராம சேவையாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின் 16வது விஜயபாகு காலாட் படைமுகாம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் கடந்த மாதம் 12ம் திகதி அங்கு ஒட்டப்பட்டன.
இந்த நிலையில் மேற்படி காணியை எதிர்வரும் 20ம் திகதி அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருவார்கள் என்று கடந்த 9ம் திகதி காணி உரிமையாளர்களுக்கு எந்தவித ஒப்பமும் இன்றி அநாமதேயமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 20 திகதி நில அளவை செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு நேரடியாகச் சென்ற போது 31 காணிகளின் உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் தமது பணியைக் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.
31 காணி உரிமையாளர்களும் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது
Geen opmerkingen:
Een reactie posten