தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

நெடுங்கேணி சிறுமி பாலியல் வன்புணர்வு! சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை!


தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க இலங்கை அரசு முன்வரவேண்டும்! இரா.துரைரெட்ணம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:39.49 PM GMT ]
இலங்கை அரசு தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி  அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொது மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழ் மக்களின்  பிரச்சினைகளை, கருத்திற் கொள்ளாது தமிழர்களும்  இத்தீவின் மக்கள் என்பதை புரிந்து கொள்ளாது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் காலத்திற்கு காலம் ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்றிய  பெரும்பான்மை  சமூகக்கட்சிகள் தங்கள் சுயநல அரசியலுக்காக இப்பிரச்சினையை  கையில்  எடுத்து தீர்வு காண்பதற்குப் பதிலாக இன்னும் இன்னும்  சிக்கலுக்குரிய ஒன்றாக மாற்றியே வந்துள்ளது.

இதன் காரணமாக  மூன்று  தசாப்தங்களுக்கு மேலான கொடிய யுத்தம், இத்தீவின் சகல  இன மக்களையும்  சொல்லொன்ணாத் துன்பத்தையும் இழப்புக்களையும் சந்திக்க வழிவகுத்து விட்டது.

ஆயினும் தமிழர் அடைந்த  துயரங்களும்,  இழப்புக்களும்,  வேதனைகளும் சொல்லில் அடங்காதவை. ஆனால் தமிழர்களுக்கான உரிமைதொடர்பான தீர்வானது  இனவாத அரசினால்   இன்னும் இன்னும் மறுக்கப்பட்டுக் கொண்டேவருகின்றது .

 அரசின் இனவாத செயற்பாட்டின் காரணமாக காலத்துக்கு காலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், தீர்வு முயற்சிகள் அனைத்தும் காலத்தை இழுத்தடிப்பதாகவே உள்ளதுடன் தமிழர்களின்   வாழ்வை இன்னும் இம் மண்ணில் சிக்கலுக்குரிய ஒன்றாகவே மாற்றிவிட்டது.

எமது உள்விவகாரமாக தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை இன்று சர்வதேச மட்டத்திற்கு நியாயம் கேட்டுச்செல்ல வேண்டிய  நிலைக்கு  மாற்றப்பட்டதற்கான முழுப் பொறுப்பையும் இலங்கை அரசே பொறுபேற்கவேண்டும்.

இதற்கு காரணமானவர்கள்  இலங்கைத்தீவின் மக்கள் அல்ல. இனவாத ஆட்சியாளர்களே காலத்திற்கு காலம் பதவியேற்ற இரு சிங்கள பெரும்பான்மை கட்சிகளும் தமிழர் தீர்வு விடயத்தில் நடந்து கொண்ட முறை  காலத்தை இழுத்தடித்து விடும் வரலாற்றைகொண்டுள்ளது.

ஆயினும் எமது ஆட்சியாளர்கள் இன்னும் கண் திறக்கவுமில்லை.   இலங்கை அரசு கடந்தகாலத்தில்  தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் காரணமாக இன்று சர்வதேசத்தின் அணுங்குப் பிடிக்குள்  சிக்கியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா,  சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, மனிதஉரிமை சபையும்  இலங்கை அரசின்  கௌரவத்தை பாதுகாப்பதற்கு பதிலாக இலங்கை அரசின் பிளையான அணுகுமுறையால் சர்வதேசம்  இங்கு வாழும் பல்லின சமூகத்தவர்களின் ஜனநாயக, மனித உரிமைகளை  மதித்து இடித்துரைக்க சர்வதேச சமுகம் முன்வந்துள்ளது

இம்மண்ணில் ஆட்சி நடாத்தும் அதிகாரத்திலுள்ளவர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு இப்பிரச்சினையை இதய சுத்தியோடு தீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதையும் இலங்கைஅரசு மறுக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் சர்வதேசத்தை முழுமையாக நம்புவதைவிட வேறு மார்க்கம் இல்லை என்பதை இலங்கை அரசிக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.

இதே வேளை தமிழர் தரப்பும் பிரச்சினையை தீர்ப்பதற்கு சரியான சந்தர்ப்பம் கைகூடிவரும் இந்நேரத்தை  உரியமுறையில் பயன்படுத்தி சகல வேறுபாடுகளையும் மறந்து தமிழர் நலன்சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்றுபட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க  முன்வர வேண்டும்.

தமிழ் தேசியத்தையும் அதன் சுயாதிபத்தியத்தையும்  தமிழர்களின் அபிலாசைகளையும் ஒரே குரலில் அழுத்திச் சொல்ல கிடைத்ததொரு அரிய சந்தர்ப்பமென கருத்திற் கொண்டு துணிவுடன் கருமமாற்ற வேண்டிய காலமிது.

எனவே  ஒருவரைஒருவர்  குறைசொல்லி  அறிக்கை விட்டு  அரசியலை நடாத்துவதைத் தவிர்த்து முறையான செயல்திட்டம் ஒன்றின் கீழ் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தருணமாகவும் இதைப் பயன்படுத்த வேண்டும்.

எனவே இவ்வேளையில் சர்வதேசம் தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நெடுங்கேணி சிறுமி பாலியல் வன்புணர்வு! சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:55.46 PM GMT ]
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுங்கேணி இராணுவ முகாமைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என்று அங்கு சென்ற செய்தியாளர் கூறுகின்றார்.
இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் விசாரணைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், சந்தேகநபர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten