தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

யாழில் ஆலய வருமானத்தி​ல் ஏழைகள் நல்வாழ்விற்கு பயன்படுத்துமாறு கோரிக்கை!


சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரே எனக்கு குரு!- பிரதியமைச்சர் முரளிதரன்?? ha ha 
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:09.12 AM GMT ]
சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன். அவர்கள் தான் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தினார்கள் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் முரளிதரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கமாக இருக்கின்றது. சர்வதேசத்தின் தலையீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் தலையீட்டிலிருந்து விடுதலை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல.
எனது சகோதரனையும் புலிகள் கொலை செய்தனர். அதற்காக நான் சர்வதேச விசாரணையை கோர முடியுமா? சர்வதேச தலையீடுகளால் என்ன நடக்கும் என்பதற்கு, இந்தியாவின் இலங்கை மீதான தலையீட்டால் எமக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மிக சிறந்த உதாரணமாகும்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வில்லையென்ற நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்து வந்தது. அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்படும் வரை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்தனர்.
ஆனால் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டனர். தற்போது வட மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். காலத்தின் தேவைக்கேற்ற வகையில் கூட்டமைப்பினர் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்புக்குரியது.
அது போன்று சர்வதேச தலையீடு அவசியம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலிருந்தும் மாற வேண்டும். ஏனென்றால் எமது பிரச்சினைகள் நாம் பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும். இராணுவ மயமாக்கலை குறைக்க முடியும்.
குரோத மனப்பான்மையை வளர்த்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் எம்மால் தீர்வுகளை காண முடியாது. சம்பந்தன், மாவை ஆகியோரை எனது குருவாகவே கருதுகின்றேன். ஏனெனில் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தியவர்கள் அவர்கள். எனவே அவர்களை மதிக்கின்றேன். எனவே அரசுடன் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

யாழில் ஆலய வருமானத்தி​ல் ஏழைகள் நல்வாழ்விற்கு பயன்படுத்துமாறு கோரிக்கை??
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:46.55 AM GMT ]
யாழிலுள்ள ஆலயங்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
யாழ் எயிட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உதவிகள் மனிதர்களை சோம்பேறிகள் ஆக்கக்கூடாது. ஒருவரின் தேவையை அறிந்து அவருக்கு ஏற்ற உதவியைச் செய்யவேண்டும்.
மதம் மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பினும், வறுமையும் மனிதனது அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் கோயில்களுக்கு பலகோடிப்பணம் செலவிடப்படும் நிலை மாறவேண்டும்.
யாழ் எயிட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட உதவிகள் ஏழை மாணவர்களின் கல்வி நிலை உயர உதவியாக இருக்கும். இந்த உதவிகளைப் பெற்ற மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து கல்வியில் முன்னேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten