ஜ.தே. க வின் கட்சி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றின் போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு. தமது ஊழல், மோசடிகளை மூடி மறைப்பதற்காக மின்கட்டனத்தை அதிகரித்த அரசு ,தற்போது ஒவ்வொருவர் மீதும் குற்றம் சாட்டித்தான் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றது. முன்னாள் மின்சக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தீர்மானத்துக்கமையவே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. என்று தற்போதய மின்சக்தி அமைச்சர் பவித்திரா வணணியாராச்சி தெரிவிக்கிறார்.
இதேவேளை அமைச்சரவை பேச்சாளரும் , அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் 1993 ஆம் ஆண்டு ஜ.தே.கட்சியால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தாலேயே மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் இலங்கையில் முதலாவது நீர் மின்நிலையத்தை நிறுவிய கொத்தலாவெல மீது குற்றம் சாட்டுவதுடன் மின்கட்டண உயர்வுக்கு மின்குமிழை உலகிற்கு அறிமுகம் செய்த தோமஸ் அல்பா எடிசனும் மற்றும் புலம்பெயர் தமிழர்களுமே காரணம் என்று கூறும் காலம் வெகுதொலைவிலில்லை எனத் தெரிவித்தார் ரணில்.
Geen opmerkingen:
Een reactie posten