[ புதன்கிழமை, 22 மே 2013, 10:03.40 AM GMT ]
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தாம் தற்போது வசிக்கும் பிரதேசங்களில் இருந்து கொண்டே வாக்களிப்பதற்கு அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்துள்ளது.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும்.
இந்நிலையில் தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாதிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முதல் அவர்கள் வடக்கில் வசித்திருந்தால் அவர்கள் வாக்களிக்க முடியும் என்றதொரு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளது.
இச் சட்டமூலம் மிகவும் கொடுமையானதாகவும் ஜனநாயகத்தை தலைகீழாக கவிழ்க்கும் வகையிலுமே அமையவுள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோல்வியடையச் செய்யும் நோக்கமே அரசாங்கத்திற்கு உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
காணாற்போன 36 பேர் உயிருடன் உள்ளதாக அரசு ஜெனிவாவில் அறிவித்தது பொய்!- தேடியறியும் உறவுகள் குற்றச்சாட்டு!
[ புதன்கிழமை, 22 மே 2013, 09:27.12 AM GMT ]
அரசு வழங்கிய வழக்கு இலக்கங்களைக் கொண்டு சிறைகளில் இவர்களைத் தேடியபோது உயிருடன் உள்ளதாக கூறப்பட்டவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சியமை, காஞ்சா விற்றமை, களவெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக காணாமற்போனோரைத் தேடியறியும் உறவுகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் காணாமற் போவர்கள் உயிருடன் உள்ளதாக ஜெனிவாவில் கூறி சர்வதேசத்தை ஏமாற்றியதுடன், காணாமற்போனோரின் உறவுகளையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எமது உறவுகள் உயிருடன் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்ட சில சிறைச்சாலைகளில் உள்ளார்கள் எனவும் எம்மிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொடர்பான வழக்கு இலக்கங்களும் எமக்கு வழங்கப்பட்டன. இந்த அடையாளங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்ட சிறைகளுக்கு சென்று எமது உறவுகளைத் தேடினோம்.
ஆனால் அவர்கள் எவரும் அங்கு இல்லை. மாறாக சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வேறு நபர்களே அந்த இலக்கங்களில் உள்ளனர் என காணாமற் போனவர்களின் உறவுகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலர் சுந்தரம் மகேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளின் கவனத் துக்கு காணாமற்போனவர்களின் உறவுகளால் இந்த விடயம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக வவுனியாவில் இவர்களைச் சந்தித்துப் பேசிய காணாமற் போனோரின் உறவுகள், இந்த விடயத்தில் அடுத்து கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசித்துள்ளனர்.
இதனையடுத்து உயிர்நீதிமன்றில் இது தொடர்பாக வழக்கொன்றைத் தாக்கல் செய்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் காணாமற்போன தமிழர்கள் 36 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் ஜெனிவா அமர்வுக்கு 5 மாதங்கன் முனபதாக இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்திருந்தது தெரிந்ததே.
காணாமற்போனோரைத் தேடியறியும் குழு, இது குறித்து 2008 ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கிளை அமைப்பான காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் முறையிட்டது.
இந்த முறைப்பாடு தொடர்பாக ஜெனிவா குழுவால் 2009 ஏப்ரல் 14ஆம் திகதி இலங்கை அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. 2012 ஒக்ரோபர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு அதற்குப் பதிலளித்துள்ளது.
அதில் காணாமற் போனதாக தெரிவிக்கப்படுவொரில் 36 பேர் உயிருடன் உள்ளதாகவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காணாமற்போனோரின் உறவினர்களுடன் இணைந்து, அரசால் கூறப்பட்ட 36 பேர் உயிருடன் உள்ளார்களா? என அறியும் முயற்சியில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழு ஈடுபட்டிருந்தது.
இந்நிலையிலேயே பல மாத தேடலுக்குப் பிறகு அரசு உயிருடன் உள்ளதாக கூறிய எவரும் அரசு கூறிய ஆதாரங்களின் படி சிறைகளில் இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten