தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

கனடாவில் நாண்டு பிடிக்கும் இந்திய இயக்கம்: மே 18 விவகாரமாம் !


தேசியதலைவரோடு சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும் ! தமிழ் நாட்டில் அதனைக் காட்டியே அரசியலை ஆரம்பித்துவிடுவார்கள் பலர். அதிலும் கொஞ்சம் உணர்ச்சியாகப் பேசவல்லவர் என்றால் சொல்லவா வேண்டும் ? உடனே ஒரு கட்சி அல்லது இயக்கத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த வரிசையில் தமிழ் நாட்டில் இயக்கம் ஒன்றை நடத்திவரும் அமைப்பு, கனடாவில் இம் முறை நாமே மே 18 நிகழ்வுகளை நடத்துவோம் என்று நாண்டு பிடிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது இது என்னடா புதுக்கதை என்று யோசிக்கவேண்டாம். புலம்பெயர் தேசங்களில் எல்லாம் சங்கீதன் குழு வந்து எல்லாவற்றையும் இரண்டாகப் பிழந்தது , தலைமைச் செயலகம் என்ற அமைப்பு தனியாக மாவீரர் தினத்தை நடத்துகிறது என்ற முறைப்பாடுகள் எல்லாம் ஒரு புறம் மறைந்து, ஒற்றுமையாக இனி நிகழ்வுகளை நடத்துவோம் என்று மக்கள் பெருமூச்சு விட்டார்கள்.

ஆனால் அதுக்கும் இப்போது வேட்டு விழும்போல இருக்கே ! கனடாவில் வழமையாக மே 18 நிகழ்வுகளை நடத்தும் புலம்பெயர் அமைப்பை, ஓரங்கட்டிவிட்டு தாமே இம் முறை மே 18 நிகழ்வுகளை நடத்துவோம் என்று இந்திய இயக்கத்தின் துணை அலுவலகம் நாண்டு பிடிக்கிறதாம். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட துயரமான நாள் அது. இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கொடுமை நடைபெற்றதே இல்லை என்று வேற்றின மக்களால், கூறப்படும் கோரம் இது. ஆனால் இன் நிகழ்வுகளை நடத்தி அதில் உண்டியலைக் குலுக்க, இந்த இயக்கம் முனைப்புக் காட்டுவது மிகவும் வேதனைக்குரிய விடையமாக அமைந்துள்ளது என கனடாவில் உள்ள அதிர்வின் நிருபர் மேலும் தெரிவித்துள்ளார். இனி நடக்கவிருப்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

லண்டனில் இம் முறை ஒரே இடத்தில்தான் மே 18 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. லண்டனில் அதிகம் வெளிநாட்டவர் வரும் இடம் ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் வரவேற்க்கத்தக்க விடையமாகும். லண்டனில் பல ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடத்தில் இம் முறை மே 18 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten