தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 april 2015

நாட்டில் ஆட்சி மாத்திரம் தான் கைமாறியுள்ளது,வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை: கலையரசன்

மஹிந்தவுடன் உறவு கொண்டாடிய ரணில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: லால்காந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 07:07.26 AM GMT ]
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமது கட்சியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கே உரித்தானது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்த போதும், அனுரகுமார திஸாநாயக்கவே மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசினார். ஊடகங்கள் வாயிலாக அரசாங்கத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்சவுடன் கோப்பி அருந்திக்கொண்டு அண்ணன், தம்பி போல் இருந்தாரே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. ரணில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பணியை சரியாக நிறைவேற்றவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் நாங்களே மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். ரணில், ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அதேபோல் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்த வகையிலும் பொருந்தமற்றவர்.
இது தவறான முன்னுதாரணம். சம்பிரதாயபூர்வமாகவே எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுகின்றார். சட்டத்திட்டங்களுக்கு அமைய எதிர்கட்சி தலைவர் நியமிக்கப்படுவதில்லை. இதற்காக நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளைச் சட்டங்கள் இல்லை. அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிப்பது தவறானது.
அந்த அடிப்படையில், தினேஷ் குணவர்தனவும் அந்த பதவிக்கு தகுதியற்றவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படும் அந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் நபரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன போன்றவர்களை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளாது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw0E.html



நாட்டில் ஆட்சி மாத்திரம் தான் கைமாறியுள்ளது,வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை: கலையரசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 07:42.17 AM GMT ]
கல்வியில் சகல அந்தஸ்த்துக்களையும் பெற்று உயர் பதவிகளுக்கு செல்லவேண்டியவர்களை நன்கு திட்டமிட்டு புறம்தள்ளிவிட்டு தமக்கு சாதகமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமித்தவர்களே இலங்கையின் பழைய அரசாங்கம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பாண்டிருப்பு விஸ்ணு மகாவித்தியாலயத்தின் சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கலந்துக்கொண்டதுடன்,கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஜனாப் ஜலீல், பிரதிக்கல்விப்பணிப்பாளர் மயில்வாகனம், தமிழ்ப்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி பி.ஜெகநாதன், மற்றும் பி.எஸ்.ஏ. இணைப்பாளர்,விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் , கல்வியின் மகத்துவத்தின் தன்மையினை அறிந்தே உரிய கல்வியியளாலர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படுவது நியதி ஆனால் அதற்கு மாறாக தங்களுக்கு சாதகமானவர்களுக்கு முறைகேடான முறையில் பதவிகளை வழங்கி அரச சேவையை முற்றிலும் தங்களுக்கு ஏற்றாற்போல் கடந்த அரசு மாற்றிக்கொண்டது.
இனிவரும் காலங்களிலும், அவ்வாறான தவறுகள் ஏற்படாத வகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு,அநீதிகளுக்கு எதிராக தட்டிக்கேட்க முன்வரவேண்டும் அப்போதுதான் ஊழல் அற்ற ஒரு நிர்வாகத்தினை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
எந்த ஒரு பாடசாலையில் ஆசிரியருக்கும், பெற்றோருக்குமிடையில் உறவு சுமூகமாக உறவு இருக்கின்றதோ அந்தப்பாடசாலை அனைத்து செயற்பாடுகளிலும் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை, காரணம் ஒருபாடசாலையின் வளர்ச்சி அந்த சமூகத்தின் அக்கறையிலும், ஆசிரியர்களின் அயராத முயற்சியிலும் இருக்குமாக இருந்தால் அந்தப்பாடசாலை அதீத வளர்ச்சியடையும் அவ்வாறு செயற்படும்போது அனைத்து கல்விப்பெறுபேறுகளும் உயர்நிலை அடையும்.
எம்மிடம் என்றும் அழியாமல் இருக்கும் ஒரு பொக்கிஷம் எதுவென்று வினா எழுப்புவோமாக இருந்தால் அதற்கான விடை கல்வியே. அவ்வாறான கல்வியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் சமூகம் மிகுந்த அக்கறையுடன் செயற்படவேண்டும்.
இந்த நாட்டில் தற்போது ஆட்சி மாத்திரம் தான் மாறி இருக்கின்றதே தவிர வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை. எமக்கான சுதந்திரம் இன்னும் சரிவர கிடைக்கவில்லை, எமது கட்சியும் இந்த அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்து செயற்படுவதனால் எதிர்வரும் காலங்களில் எமக்கான தீர்வை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw0G.html

Geen opmerkingen:

Een reactie posten