[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 11:59.19 AM GMT ]
பெலவத்தை கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தமது கருத்தை தெரியப்படுத்த வேண்டும்.
இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஏனையோர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நேரடியாக அறிவிக்க வேண்டியது கடமையாக உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் மகிந்த ராஜபக்ச போன்று வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதனை தவறவிட்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் இருக்க கூடாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலை ஒழிப்பதாக தெரிவித்த அரசு ஊழல்வாதிகளை அமைச்சர்களாக்கியுள்ளது! பொன்.செல்வராசா
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:16.53 PM GMT ]
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதில் புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரை மண்முனை மேற்கு பிரதேச மக்களால் கௌரவிக்கப்படும் நிகழ்வு மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
இந்த நாட்டில் தமிழ் மக்களாகிய நாம் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாறியுள்ள இந்த அரசாங்கத்தின் மூலமும் கடந்த அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட விடயங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றதை நாம் காண்கின்றோம்.
கடந்த அரசு எமது மக்களுக்கு இழைத்த கொடுமையின் காரணமாகவே அந்த அரசின் தலைவரை நாம் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம் என்பதை தற்போதைய அரசும் மனதில் கொள்ள வேண்டும்.
நாம் கடந்த போராட்ட காலத்திலும் சரி கடந்த அரசு நிலவிய 10 வருடங்களாகவும் அனுபவித்த தாங்கொணா வேதனைகளைச் சகித்துக் கொள்ள முடியாத காரணத்தினாலேயே தற்போது நிலவும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஒன்று திரண்டோம்.
நாம் கடந்த போராட்ட காலத்திலும் சரி கடந்த அரசு நிலவிய 10 வருடங்களாகவும் அனுபவித்த தாங்கொணா வேதனைகளைச் சகித்துக் கொள்ள முடியாத காரணத்தினாலேயே தற்போது நிலவும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஒன்று திரண்டோம்.
இன்று மீண்டும் எம்மால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசும் அதன் தலைமையும் அதுபோன்ற வேதனைகளையே எமது மக்களுக்கு சுமத்த முனைவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்காது.
நாம் அதனை எப்போதும் தட்டிக் கேட்பவர்களாகவே இருப்போம். இவ்வாறான காரணங்களால் தான் நாம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெறாமல் விடுத்தோம்.
அன்று அந்த அரசாங்கம் விட்ட பிழையை இந்த அரசாங்கமும் மேற்கொள்ளுமாயின் அதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.தற்போதைய ஆட்சி மாற்றம் இடம்பெற்றதில் இருந்து மட்டக்களப்பில் மாத்திரம் 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த 08ம் திகதியின் பின்னர் எமது மக்களுக்கு பாதுகாப்பு நிலை ஏற்படும் என்று நாங்களும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான கைதுகள் இடம்பெறுவது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கின்றது. இதனை நாங்கள் எதிர்த்தே தீர்வோம்.
எனவே இந்த அரசு இவ்விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த நிலைகள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதனால் தான் நாம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம்.
நாம் மத்தியில் அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்காக ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.எமது கொள்கையின் நிமித்தம் எமது மக்களுக்கு ஒரு சுமூக நிலை ஏற்படும் என்ற காரணத்தைக் கருத்தில் கொண்டே புதிய ஜனாதிபதிக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவு வழங்கினோம்.
ஆனால் அதே நிலையில் தற்போதைய அரசும் இருக்க முனைவது போல் தோன்றுகின்றது.அதுமட்டுமல்லாது ஊழலை ஒழிப்பதாக தெரிவித்து ஊழல் செய்தவர்களை மீண்டும் அமைச்சர்களாக அலங்கரித்துள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது மீண்டும் ஒரு அசாதாரண நிலை இந்நாட்டில் ஏற்படுமோ என்கின்ற கேள்விதான் எம்மத்தியில் எழுகின்றது என்று தெரிவித்தார்.
கன்னன்குடா கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மண்முனை மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை அமைச்சர்கள், உதவித் தவிசாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மாகாண சபை அமைச்சர்கள், உப தவிசாளருக்கு வாழ்த்து மடல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktzB.html
Geen opmerkingen:
Een reactie posten