[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 10:21.41 AM GMT ]
இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தின்போது முதலில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலத்தடி நீர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.
இது சம்பந்தமான நிபுணர்குழு இது குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் என்று இறுதி அறிக்கையிடும் வரைக்கும் தொடர்ந்தும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் இன்னும் தேவைப்படுமிடத்து மேலதிக நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்காக மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்புத் தலைவர்கள் தீர்மானித்தார்கள்.
தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இதில் இருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி கூடி ஒரு முடிவை எடுத்த பின்புதான் தாங்கள் இறுதி முடிவினை எடுக்க முடியும் என்று மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்தார்.
ஆகவே அதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டு, வருகின்ற 17, 18ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தி;ல் கூடி இறுதி முடிவினை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
போலி வீசா மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தவர்கள் கைது!
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 10:28.38 AM GMT ]
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தமது உண்மையான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு சென்றிருந்தனர்.
அங்கிருந்து போலி வீசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த போது அந்நாடுகளின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 இலட்சம் ரூபா செலவு செய்து இவர்கள் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt5B.html
வலி-வடக்கில் உள்ள சில காணிகளைப் பார்வையிட இராணுவம் அனுமதி!
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 10:29.11 AM GMT ]
இன்று காலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற காணி மீளளிப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போதே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு (ஜே-246), தையிட்டி தெற்கு (ஜே-250), வீமன்காமம் வடக்கு (ஜே-236), வீமன்காமம் தெற்கு (ஜே-237), காங்கேசன்துறை தெற்கு (ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 567 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.
இதன்போது இந்தப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டமைக்கான சான்றிதழையும் இராணுவத்தினர் கலந்துரையாடலின் போது சமர்ப்பித்தனர்.
எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த காணிகளை பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt5C.html
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறீர்களா?
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 10:42.25 AM GMT ]
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt5F.html
Geen opmerkingen:
Een reactie posten