[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 11:42.37 AM GMT ]
சுன்னாகம் குடிநீரானது பாதுகாப்பனது என நிபுனர் குழுவின் இறுதி அறிக்கை வெளிவரும் வரைக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போதே இந்த கருத்தினை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலத்தடி நீர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான நிபுணர்குழு இது குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் என்று இறுதி அறிக்கையிடும் வரைக்கும் தொடர்ந்தும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் இன்னும் தேவைப்படுமிடத்து மேலதிக நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,இதற்காக மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்புத் தலைவர்கள் தீர்மானித்தார்கள்.
இதேவேளை இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி கூடி ஒரு முடிவை எடுத்த பின்புதான் தாங்கள் இறுதி முடிவினை எடுக்க முடியும் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டு, வருகின்ற 17, 18ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கூடி இறுதி முடிவினை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 11:58.02 AM GMT ]
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
400 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பத்திரங்கள் விநியோகம் தொடர்பிலான பிரேரணை சபையில் அதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதனால் இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் கேட்டு விலகிக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதுவிடின் வெகுசீக்கிரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காலத்திற்கு ஏற்றவகையில் கல்வி அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்: யோகேஸ்வரன்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 12:19.47 PM GMT ]
கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு இடம்பெறுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்காது என்றும் அவர் கூறினார்.
அண்மையில் இடம்பெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி உதயன் மூலை விவேகானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும் பேது தமிழ் சமூகம் கல்வித் துறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பின்னோக்கியே காணப்படுகிறது.ஏன் எங்களால் முன்னேற்றமடைய முடியாது என்று இனிவரும் காலங்களில் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுத்திருந்தார்கள்.
நாங்கள் இது தொடர்பாக கேட்ட போது கிழக்கு மாகாணத்திலிருந்த இராணுவ அதிகாரியான ஆளுநரின் உத்தரவு என கூறினார்கள்.
ஜனவரி 8ம் திகதியுடன் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என நினைத்தோம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில கல்வி வலயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
ஆனால் நாங்கள் இன்னமும் கடந்த அரசாங்கத்திலிருந்தவர்களுக்கே விசுவாசமாகவிருப்போம் என சில கல்வி அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களை நாங்கள் மாற்றுவதற்குரிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
நாங்கள் பட்டிருப்பு, மட்டக்களப்பு, மேற்கு வலயங்களிலுள்ள பல பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிதிகளாகக் கலந்து கொண்டிருக்கிறோம்.
கல்குடா கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளின் நிகழ்வுகளுக்குச் சென்றுள்ளோம். யார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாது என நடவடிக்கையெடுத்தார்களோ அவர்களுக்கு பதிலாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தண்டாயுதபாணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதேச அரசியல்வாதிகளின் விசுவாசிகளாக செயற்பட்ட கல்வி அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதேச அரசியல்வாதிகளின் விசுவாசிகளாக செயற்பட்ட கல்வி அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை.
அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி பல வருட காலமாக தொடர்ந்தும் ஒரே பாடசாலையில் கடமையாற்றுகிறார்கள்.
ஆனால் சில பெண் ஆசிரியர்கள் தொடந்தும் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றுகிறார்கள்.இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.பாடசாலைகளின் ஆசிரியர் வளப்பங்கீடு தொடர்பில் எல்லோருக்கும் சமநிலை பேணப்பட வேண்டும்.
கல்வி நிர்வாகச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt6B.html
எதிர்க்கட்சியிடம் மக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்: நிதியமைச்சர்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 12:48.02 PM GMT ]
இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடிய போது வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற எதிர்க்கட்சி இணக்கம் வெளியிட்டிருந்தது.
இந்த பணம் அரசாங்கம் மக்களுக்காக செலுத்தும் பணம் என்பதை அறிந்திருப்பதால், அதற்கு வாக்கெடுப்பை கோர போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறியிருந்ததாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
400 பில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக திறைசேரி முறி பத்திரங்களை வெளியிட அனுமதி கோரி நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 21 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
யோசனை தோற்கடிக்கப்பட்டமையானது அரசாங்கத்தின் இருப்புக்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது எனவும் தோல்வியடைந்தது சட்டமூலம் அல்ல எனவும் ஒழுங்குவிதி ஒன்று மாத்திரமே தோல்வியடைந்தது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கையானது பின்னால் இருந்து முகில் கத்தியால் குத்துவதற்கு ஈடானது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதனை எதிர்க்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்திருந்தார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி முறி பத்திரங்கள் மூலம் சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணத்தை வழங்கவும் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வது போன்ற நடவடிக்கைகளுக்காக நிதியை திரட்ட அரசாங்கம் தீர்மானித்திருந்தது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த யோசனையை நேற்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தமை சம்பந்தமாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய தேசியக் கட்சி கூறும் சகலவற்றும் கைகளை தூக்க தமது கட்சி தயாரில்லை என கூறினார்.
திறைசேரி முறி பத்திர யோசனையை நிறைவேற்றி கொள்ளும் எவ்விதமான தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கவில்லை எனவும் அது பற்றி எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt6C.html
Geen opmerkingen:
Een reactie posten