தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 april 2015

மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றியது புதிய அரசாங்கம்!டிரான்ஸ்பெரென்ஸி

மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயற்பாடாகும்!- டி.பி.ஏக்கநாயக்க
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 12:22.59 AM GMT ]
ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தால் அதது தொடர்பில் நடவடிக்கை எடுகு;கப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உடனடியாக அமுலக்கு வரும் வகையில் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
கட்சி ஒழுக்க விதிகளை மீறியிருந்தால் முதலில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதன் பின்னரே மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டுமென ஏக்கநாயக்க கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றியது புதிய அரசாங்கம்!டிரான்ஸ்பெரென்ஸி
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 05:48.18 PM GMT ] [ பி.பி.சி ]
பதவி ஏற்ற புதிய அரசாங்கம் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களை ஏமாற்றிவிட்டதாக டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது. 
உலக நாடுகளில் நிகழும் ஊழல்களுக்கு எதிராகவும், அரசுகள் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும் என்பதைக் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டும் இயங்கும் டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு, புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள இலங்கை அரசு மீது சில விமர்சனங்களை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, நாட்டில் பல மாறுதல்களைக் கொண்டுவரும் நோக்கில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சில திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
அதில் ஊழலை ஒழிப்பது, செலவினங்களைக் குறைப்பது, ஜனநாயக அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவது போன்ற பல அம்சங்களை அடங்கியிருந்தன.
ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் புதிய அரசு வேலைத்திட்டங்களை அறிவித்திருந்தாலும், ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் போதிய முன்னேற்றம் இல்லை என டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைக் கிளையின் மூத்த அதிகாரியான ஷான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
அரச செலவினங்களை குறைப்பது என்பதும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது.
அமைச்சரவையில் 25 அமைச்சர்களே இருப்பார்கள் என்று அவர் கூறியதற்கு மாறாக இப்போது பிரதமர் உட்பட 40 பேர் காபினெட் அமைச்சர்களாகவும் மேலும் பலர் இராஜாங்க மற்றும் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை தமது அரசாங்கம் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு புதிய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைத்திருக்கும் தன்மை இப்போது கேள்விக்குரியாகியுள்ளதுடன் பல அதிருப்திகளும் அண்மைய நாட்களாக புதிய அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ளமை தெரிந்ததே.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw4D.html

Geen opmerkingen:

Een reactie posten