தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

மைத்திரியின் உத்தரவினால் தமிழக மீனவர்கள் கடுப்பில்

மகிந்தவை அரசியலுக்கு கொண்டு வர ஐ.தே.கட்சியும் உதவி செய்கிறது: அமைச்சரவை பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 09:01.22 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சியும் உதவி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் எனவும் அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய யோசனைகள்
மத மற்றும் இன பகையுணர்வுகளுக்கு உதவும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்யவும் அப்படியான கருத்துக்களை வெளியிடுவோருக்கு தண்டனை வழங்க தேவையான திருத்தங்களை குற்றவியல் சட்டத்தில் சேர்க்கும் நோக்கிலும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவையில் கொண்டு வந்த யோனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலத்திரனியல் அடையாள அட்டை, கைவிரல் ஆகியவற்றுடன் ஆட்களில் விபரங்களை உள்ளடக்கும் யோசனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச வெசாக் தினத்தை மஹியாங்கனையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் ஒரு கிலோ தேயிலைக்கு 80 ரூபா நிர்ணயித்த விலையை வழங்கவும் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் சிறிய றப்பர் தோட்ட உரிமையாளர்களுக்கு நியாயமான விலையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாகிஸ்தான் விஜயத்தின் போது, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் பாகிஸ்தான் கப்பல் கூட்டுத்தாபனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் விவசாய நிறுவனங்களை மேம்படுத்த ஜப்பான் 55 கோடி ரூபாவை வழங்க இணங்கியுள்ளது.
விலை மனுக்கள் கோராமல் முன்வைக்கப்படும் திட்ட யோசனைகளை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அப்படியான யோசனைகள் தொடர்பில் விலை மனுக்களின் அடிப்படையில் செயற்படுவது எனவும் அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது.
திஸ்ஸ கரலியத்தவின் பதவி விலகல் குறித்து விலக்கிய ராஜித
புத்தசாசன மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இராஜினாமா செய்துக்கொண்டதற்கு காரணம் தனக்கு அமைச்சர் பதவி சிறியது என்பதனாலேயே என அமைச்சரவை பேச்சாளரும், சுகாரதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸ கரலியத்த தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கும் போது நான் அந்த இடத்தில் இருந்தேன்.
அப்போது அவருடைய பதவி விலகலுக்கான காரணத்தை வினவிய போது,20 வருடங்களாக அரசியலில் இருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான எனக்கு இந்த அமைச்சுப்பதவி போதாது என திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார் என ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி வரி சலுகை: கவனம் செலுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 08:16.17 AM GMT ]
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி விட்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளதாக அதன் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் பணிப்பாளர் உகோ அஸ்டுதோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். குறித்த வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையும்,ஐரோப்பிய ஒன்றியமும் சிறந்த புரிந்துணர்வுடன் கூடிய வேலைத்திட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மனித உரிமைகளை பாதுகாப்பது, தொழிலாளர் உரிமை, சுற்றுச் சூழல் கொள்கை, நாட்டின் நல்லாட்சி போன்றவை கவனத்தில் கொள்ளப்படும்.
 இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில் இலங்கை செயற்படுமாயின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க தயார். இது தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் உகோ அஸ்டுதோ குறிப்பிட்டுள்ளார்.
 இது சம்பந்தமாக ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
 அதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அஸ்டுதோ, மனித உரிமை தொடர்பில் சாதகமான முன்னேற்றத்தை காண முடிவதாக கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் இறுதிக்கட்டத்தில் யுத்தத்தின் போது  நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப விசாரணைகளை நடத்துவது முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: 
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq3E.html

மைத்திரியின் உத்தரவினால் தமிழக மீனவர்கள் கடுப்பில்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 08:14.59 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஜனாதிபதியின் உருவப்பொம்மைகளை எரித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் கடந்த 24ம் திகதி இலங்கை, இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது,
வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கை தொடர்பில் நேற்றைய தினம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
இதன் போது எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவினாலேயே தமிழக மீனவர்கள் கொந்தளித்துள்ளனர்.
இதன்படி தமிழக வாழ்வுரிமை கட்சியின் பிரதிநிதித்துவத்தில் தருமபுரியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உருவப்பொம்மையொன்று எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கட்சியினால் தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு விடுத்துள்ள இவ் உத்தரவை இந்திய மத்திய அரசு வன்முறையாக கண்டிக்க வேண்டும் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் இக்கருத்து தமிழக மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இருதரப்பு பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவு பெறாத நிலையில் ஜனாதிபதியின் இக்கருத்து இலங்கை வடபகுதி மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது எனவும்,
எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவோம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு இந்திய மத்திய அரசு கண்டனம் தெரிவித்திரந்தால் ஜனாதிபதி தற்போது இதுமாதிரியான ஆணவ பேச்சை முன்வைத்திருக்கமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மீனவர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுங்கள்:ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்தமையானது கண்டனத்துக்குரியது என தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் பகுதியில் ஆண்டிற்கு 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி சிறிசேன நிரகரித்துள்ளதோடு, எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே ஜி.கே. வாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் வழங்கிய டெனீஸ்வரன்- மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாட இடமளிக்க முடியாது: சம்பந்தன்
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq3D.html

Geen opmerkingen:

Een reactie posten