தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஜனாதிபதியின் சகோதரர்



அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 06:14.44 AM GMT ]
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரி ரொபர்ட் ரோஸ் மற்றும் முப்படைகளின் பிரதம அதிகாரி ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே அமெரிக்காவுடனான பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இலங்கை படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கை படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குவது  தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என ஜகத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கடந்த கால அரசாங்கம் ஆடசியிலிருந்த போது இலங்கை படையதிகாரிகள் அமெரிக்காவில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்குகளில் பங்கேற்பதற்கு கூட வாய்ப்பு கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq2E.html

மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்?
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 06:27.16 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முறையில் மாற்றம் செய்ய முடியாது போனாலும் ஜனாதிபதி கட்டாயம் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனை தவிர தகவல் அறியும் சட்டம் மற்றும் கணக்காய்வு சட்டமூலம் என்பன 22ம் 23ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் இன, மத மற்றும் ஜாதி வாத பகையுணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடப்படுவதை தடை செய்யும் சட்டமூலம் குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் வெசாக் பௌர்ணமி உற்சவம் முடிவடைந்த பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து, தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

பீகொக் மாளிகையை விலை கொடுத்து வாங்கினார் மகிந்த ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 06:41.01 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோட்டே பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படும் மாளிகையை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த மாளிகையை தான் மகிந்த ராஜபக்சவுக்கு இலவசமாக வழங்கியதாக லியனகே கடந்த வாரம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
எனினும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லியனகே, அந்த மாளிகையை இலவசமாக வழங்கியிருப்பார் என்பதை நம்ப முடியாது என அவரது வர்த்தகத்துடன் சம்பந்தப்படட நபர்கள் கூறியுள்ளனர்.
மாதம் 4 லட்சம் ரூபா வாடகைக்கு விடப்பட்டிருந்த பீக்கொக் மாளிகையை எந்த விதத்திலும் இலவசமாக கொடுத்திருக்க மாட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின்படி பீக்கொக் மாளிகையில் உள்ள நீச்சல் தடாகம் மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு ஏற்றால் போல் மாற்றியமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன் எட்டு வருடங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமாகும் வகையிலான உடன்பாட்டில் பிக்கொக் மாளிகை வழங்கப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
கொழும்பில் உள்ள இரண்டு அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் பீகொக் மாளிகையும் ஒன்றென அடையாளம் காணப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி மாளிகையுடன் அலரி மாளிகையையும் பயன்படுத்தி வந்ததுடன் நாட்டில் பல பிரதேசங்களில் புதிதாக ஜனாதிபதி மாளிகைகளை கட்டுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஜனாதிபதியின் சகோதரர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 07:24.08 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரும், ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவருமான பி.ஜி.குமாரசிங்கவிற்கு மூன்று மடங்கு சம்பள உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர்சபை குறிப்பிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவரின் மாதாந்த சம்பளம் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக இருந்த நிலையில் அதனை 30 லட்சம் வரை உயர்த்த ஶ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமானது தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்குவதுடன், அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைய பணிப்பாளர் சபை இந்த சம்பள உயர்வு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அடிப்படை சம்பளம் டெலிகொம் மற்றும் மொபிடெல் ஆகிய இரு நிறுவனங்களிலும் கிடைக்கும் மேலதிக கொடுப்பனவுகளுடன் சேர்த்தால் சுமார் ஒரு கோடி ரூபாவை சம்பளமாக பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகொம் நிறுவன பணிப்பாளர் சபையின் இந்த சம்பள உயர்வு முடிவுக்கு நிறுவனத்தின் பங்காளி நிறுவனமான மலேசியாவின் மெக்‌ஷிஸ் நிறுவனம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பணிப்பாளர் சபை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறு கண்மூடித்தனமான தீர்மானம் எடுப்பதாயின் மெக்‌ஷிஸ் நிறுவனம் தமது பங்குகளை விற்க நேரிடும் என குறித்த நிறுவனம் டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளதுடன் பங்குகளை விற்பது குறித்து மெக்‌ஷிஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq2J.html

Geen opmerkingen:

Een reactie posten