கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று காலை கொரியாவிலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான S.Q 468 என்ற விமானத்தில் கட்டுநாயக்காவை வந்தடைந்த குறித்த இளைஞரை தாம் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம்?
தனது வயதை 11ஆக அதிகரித்துக்காட்டி போலி கடவுச்சீட்டை பெற்று கொரியாவிற்கு சென்று தொழில் புரிந்த இளைஞர் ஒருவர் 12வருடங்களின் பின் நாடு திரும்பியுள்ளார்.
எனினும் அவர் தனது உண்மையான வயதின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே நாடுதிரும்பியுள்ளார். இதனை லாபகமாக அறிந்து கொண்ட பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்திய போது,
அவர் தனது 19வது வயதில் 2003ம் ஆண்டு இலங்கையில் இருந்து கொரியா நாட்டிற்கு சென்றுள்ளார்
3மாத வர்த்தக விசாவினைப்பெற்று கொரியா சென்றிருந்ததுடன் 12வருடங்களாக அங்கு சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்திருக்கின்றார்.
இந்தநிலையில் கொரிய அரசாங்கம் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது குறித்த இளைஞர் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து தனது உண்மையான வயதின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கொரியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியிருந்தமை தெரியவந்தது.
இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக விமானநிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறான போலிக் கடவுச்சீட்டுக்களை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிவர குடியகல்வு திணைக்களம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw2B.html
Geen opmerkingen:
Een reactie posten