[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 04:20.43 AM GMT ]
புத்த துறவிகள் 5000ற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் நடை பவனி ஒன்றினை நடத்துவதற்கு தேசிய புத்த துறவிகள் சங்கம் ஆயத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவ் நடை பவனி மேற்கொள்ளவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நல்லாட்சியில் பழிவாங்கள் இடம் பெற கூடாது. எனினும் தொடரந்து பழிவாங்கள் இடம் பெற்றக்கொண்டே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபகச்விற்கு வாக்களித்த 58 லட்ச மக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்து அறிக்கை ஒன்று வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்தி தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைகுழுவிடம் தேசிய புத்த துறவிகள் சங்கம் விசேட வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks6H.html
சவூதியில் இலங்கை பணிப்பெண் கொலை! சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 05:31.32 AM GMT ]
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு பணிபெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார். அவரது கணவரான டபிள்யூ.ஏ.வசந்த குமார என்பவரே மேற்படி பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக மேற்படி பெண், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரொருவரின் உதவியில் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அப்பெண் பணிபுரிந்த வீட்டிலிருந்து கடந்த 2014.8.24ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு அவரது சடலம் பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், குறித்த பண்ணையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சவூதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
தனது மனைவி தொடர்பில் அறிந்து கொள்வதற்கு தனக்கு உதவுமாறு குறித்த பெண்ணின் கணவர், வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கமையவே, அவர் இந்த பொலிஸ் முறைப்பாட்டைச் செய்துள்ளார். தனது மனைவியை சவூதிக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் கோரியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks7B.html
மீண்டும் அரசியலுக்கு வருவதாக கூறும் கோத்தா
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 06:27.21 AM GMT ]
நேற்று சிங்கள ஊடகமொன்றுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக நடைமுறையில் உள்ள அரசாங்கத்தில் செயற்படுவதற்கு எனக்கு யோசனை இல்லை.
பல காரணங்களுக்காகவும் பலரின் வேண்டுக்கோளிற்கமையவும் இறுதியாக அரசியலுக்கு வர தீர்மானித்துள்ளேன்.
எப்படியிருப்பினும் அரசியலுக்கு வரவதற்கான கட்சியை நான் இதுவரை தீர்மானிக்கவில்லை.
எனது அவசியமாக இருப்பது எதாவது ஒருவகையில் நாட்டிற்கு சேவை செய்ய செய்வதும், அதிகாரி என்ற ரீதியில் அதனை என்னால் செய்ய முடியும் எனவும் நான் நம்புகிறேன்.
நான் கடந்த காலங்களில் பல்வேறு சேவைகளை நாட்டிற்கு செய்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் அரசியலுக்கு சென்று மேலும் பல சேவைகளை நாட்டிற்கு வழங்குவதற்கு நான் எதிர்பார்க்கிறேன் என கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருணாவை விசாரணை செய்யுமாறு உலமா கட்சி கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 07:07.53 AM GMT ]
கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார்.
இதன்போது 1990ம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போன தனது சகோதரர் அக்ரம் மற்றும் தந்தை சம்பந்தமாகவும் முன்னாள் அமைச்சர் முரளிதரனிடம் விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகள் கடந்த இரு நாட்களாக கல்முனையில் நடைபெற்று வருகிறது.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks7I.html
Geen opmerkingen:
Een reactie posten