அம்பாறை பொத்துவில் பிரதேசங்களில் மக்களின் ஜீவனோபாயங்களை சிதைக்கும் செயற்திட்டங்கள்: கலையரசன் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 04:27.00 AM GMT ]
நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வின்போது பிரேரணை ஒன்றினை முன்வைத்து இந்தக்கருத்தினை கூறினார்.
பிரேரணையை முன்வைத்து மேலும் கருத்துரைக்கையில், பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட சங்கமங்கண்டி, கோமாரி பகுதியைச்சேர்ந்த மக்கள் கடந்த பல மாதங்களாக முனைத்தீவு வட்டை, பெரியமுத்திரைக்கண்டம், காளையடிக்குடா,
மாவடிமுந்தல், கல்லடிமுந்தல், சங்கமங்கண்டிவட்டை, களுகொல்ல வட்டை, களுகொள்ளக்கண்டம், பாலையடிவட்டை, கந்தன்குளம், கோமாரி மேற்கு வட்டை, ஊரணிமேற்கு வட்டை, கருவப்பற்று ஆகிய இடங்களில் சேனைப்பயிர்ச்செய்கையை செய்து தமது வாழ்நாளை கழித்து வந்தார்கள்.
இந்த நாட்டிலே இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக அந்தப்பிரதேசங்களுக்கு செல்லமுடியாது என இலங்கை இராணுவத்தினர் அப்பகுதி மக்களை தடுத்து நிறுத்தினார்கள், அதனால் அந்த மக்கள் அங்கு செல்லவில்லை.
தற்போதைய சாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த மக்கள் மீண்டும் தங்களுடைய பிரதேசத்திற்கு சென்று பயிர் செய்யவேண்டும் என முற்பட்ட போது வனபரிபாலன இலாக்காவினரும், இராணுவத்தினரும் இந்த மக்களை செல்ல முடியாது என தற்போதும் தடுத்து நிறுத்துகின்றார்கள்.
இதனால் அந்த மக்கள் தங்களின் ஜீவனோபாயங்களை இழந்து, தங்களது வாழ்நாளை கழிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இவர்களது எதிர்காலத்தினை பற்றி சிந்திக்கவேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு சிந்திப்பதற்கு மாகாணசபை கருணைகாட்டவேண்டும்.
1960ஆம் ஆண்டில் இருந்து சிறுசிறு குடிசைகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலகட்டத்தில் வாழ்வாதாரம், பொருளாதாரம் என அந்த மக்கள் மேலோங்கி காணப்பட்டார்கள். ஆனால் தற்போதைய சூழலில் அங்கு வாழ்ந்த மக்கள் தங்களது உறவுகள் வீடுகளில் தங்கியிருந்து வாழ்ந்து வந்தார்கள்.
2009க்கு பின்னராவது இந்த பிரதேசத்திற்குச்சென்று தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து முற்பட்டவேளையில் இங்குள்ள வனபரிபாலன இலாகாவினர் அந்த மக்களை மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். இது தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கதைத்தபோது,இந்த விடயம் தொடர்பாக எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை எனவும் அவர்களே அந்த அறிவித்தலை விடுத்தார்கள் எனவும் கூறியிருந்தார்.
இங்கு கனகர் கிராமத்தில் 1975ஆம் ஆண்டு 178 குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசமாகும். 1983ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் 30 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தசூழலின்போது இந்திய இராணுவத்தினரால் இப்பகுதி முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அப்போதைய அரசாங்கத்திடம் முறையிட்டபோது அப்போதைய அரச அதிபரும், இராணுவ பிரிக்கேடியருமான கலாபன நேரடியாக அந்த இட்த்திற்கு வந்து பார்வையிட்டு இந்த மக்களுக்குரிய புனர்வாழ்வு பணிகளை செய்தனர்.
இந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பலமுறை ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் எடுத்துக்கூறியும் இதுவரைக்கும் எந்தப்பயனும் கிடைக்கவில்லை இன்றும் அந்தமக்கள் அவல நிலையையே அனுபவித்து வருகின்றார்கள்.
அவர்களது வீடுகளுக்குள் காடுகள் வளர்ந்து அங்கு செல்லமுடியாத நிலையிருப்பதனை நான் நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். இவ்வாறுதான் தமிழர்களது பூர்வீக நிலங்கள் அவர்களது கைகளில் இருந்து விலகி அற்றவர்களினால் கபளீகரம் செய்யப்படுவதனைஅவதானிக்கமுடிகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் இங்குள்ள மக்களின் அவலநிலை தொடர்பாக கிழக்கு மாகாணசபை கவனத்தில் எடுத்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த முன்வரவேண்டும் எனவும் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUko5J.html
தேசிய கீதத்தை அவமானப்படுத்திய ஜனாதிபதி நாட்டு மக்களை எப்படி நேசிப்பார்- தினேஸ் கேள்வி
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 05:10.28 AM GMT ]
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, சந்திரிக்கா, மகிந்த ஆகியோர் அன்று தேசிய கீதத்திற்கு அருமையாக மரியாதை செலுத்தினார்கள்.
ஆனால் இன்று எங்கள் நாட்டு தேசிய கீதத்தை அவமானப்படுத்திய ஒரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான். ஜனாதிபதி பதவி பிரமானம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்ட ஒளிநாடாக்களை மீண்டும் ஒளிபரப்பு செய்து பார்க்குமாறு தொலைகாட்சி சேவைகளுக்கு நான் கூறுவேன்.
பதவிபிரமானம் பெற்றுக்கொள்ளும் தினத்தன்று தேசிய கீதம் பாடப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரினுள் இருந்தார். தேசிய கீதத்தை மதிக்காத தலைவர் ஒருவர் எவ்வாறு நாட்டு மக்களை நேசிப்பார் என்று தினேஸ் குனவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை எட்டி உதைப்பதற்கான தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்வதனை காணமுடிகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவை பகைக்காதீர்கள்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 05:11.24 AM GMT ]
சீனா கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவை பின்தள்ளிவிட்டு உலகின் வலுவான பொருளாதாரமாக உருவாகியுள்ளது என மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் பலம் பொருந்திய பொருளாதாரத்தை கொண்ட நாடாக அமெரிக்கா காணப்பட்டது. எனினும் தற்போது அமெரிக்க பொருளாதாரம் மந்த கதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்கா சீனாவிடம் கடன் பெறும் நிலையை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் எந்தவித பொறுப்புணர்ச்சிகளுமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளதுடன்,
சீனாவின் உதவி அவசியமில்லை எனும் எண்ணத்தை கைவிட்டு சீனாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
சீனாவுடன் பகைமையை வளர்த்து கொள்வதினால் சில சந்தர்ப்பங்களில் சீன ஏற்றுமதிகளை பாதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எல்லை தாண்டும் மீனவர்களை சுடுவதற்கு அதிகாரம் உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்த தினேஸ் குணவர்தன,
முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும்,
எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை முடிவுறுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கேட்டுகொண்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் மாணவர் மீது மிலேச்ச தாக்குதலை நடத்தியது: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 06:24.21 AM GMT ]
தனியார் பல்கலைக்கழகங்களை இல்லாதொழிக்குமாறும், பாடசாலை மாணவர்களிடம் பணத்தை அறவிடும் சுற்றுநிருபத்தை இரத்துச் செய்யுமாறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 ஆயிரம் ரூபா மாகாபொல புலமை பரிசில் பணத்தை சரியாக வழங்குமாறும் கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து அலரி மாளிகை வரை இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கொள்ளுப்பிட்டி சந்தியில் பொலிஸார் தடையேற்படுத்தி பேரணியை தடுத்து நிறுத்தும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அப்போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பொலிஸார் மாணவர்களை கலைக்க தண்ணீர் தாரை தாக்குதல், கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் லத்தி தாக்குதலை நடத்தினர்.
பொலிஸாரின் பொல்லு தாக்குதலில் சில மாணவர்கள் காயமடைந்ததுடன் 4 மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாணவர்கள் வீதியில் அமர்ந்து சத்திய கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணிநேரம் சத்திய கிரக போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதுடன் 4 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நஜீத் இந்திக,, நல்லாட்சியை ஏற்படுத்த போவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மேற்கொள்ளும் இந்த மிலேச்சத்தமான செயலுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட அனைத்து மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாணவர்கள் போராட்டங்களை நடத்தும் போது மிலேச்ச தாக்குல்கள் கட்டவிழ்த்துவிடபடுமாயின் எதிர்காலத்தில் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, மாணவர்கள், பெற்றோர் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இந்திக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyETVSUko6I.html
Geen opmerkingen:
Een reactie posten